தமிழ்மொழியைவிட சமஸ்கிருதம் பழமையானதா..? பாடப்புத்தகத்தால் சர்ச்சை

காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?” என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

News18 Tamil
Updated: July 26, 2019, 10:02 PM IST
தமிழ்மொழியைவிட சமஸ்கிருதம் பழமையானதா..? பாடப்புத்தகத்தால் சர்ச்சை
பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற பதிவு
News18 Tamil
Updated: July 26, 2019, 10:02 PM IST
தமிழை விட சமஸ்கிருத மொழியே தொன்மையான மொழி என 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் கி.மு. 300 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் என்றும், கி.மு. 2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு பாடப்புத்தக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், தேசிய கீதம் தவறாக குறிப்பிடப்பட்டும், பாரதியார் காவி தலைப்பாகை அணிந்திருப்பது போல் படம் இடம்பெற்றும் சர்ச்சைகள் கிளம்பின. தற்போது தமிழை விட சமஸ்கிருதமே தொன்மையான மொழி என மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழக அரசு.


இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக ட்வீட் போட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ” எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால், சமஸ்கிருதமோ 4000 ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகம். காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12-ஆம் வகுப்பு ஆங்கில நூலில் தமிழை விட தொன்மையான மொழி சமஸ்கிருதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு ஆகும். தமிழ் செம்மொழி தொடர்பான அந்தப் பாடத்தில் தேவையற்ற இந்தத் தகவல் திணிக்கப்பட்டிருப்பது ஏன்?

Loading...

தமிழின் தொன்மையை சந்தேகிக்கும் வகையில் பாடநூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அடங்கிய வினா நீக்கப் பட வேண்டும். இதன் பின்னணியில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...