Home /News /education /

இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பில் அரசுப்பள்ளி மாணவிகள்: அமைச்சர் நேரில் வாழ்த்து

இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பில் அரசுப்பள்ளி மாணவிகள்: அமைச்சர் நேரில் வாழ்த்து

காட்சிப் படம்

காட்சிப் படம்

AZAADISAT satellite mission: சாதனை புரிந்த மாணவிகளை அறிந்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அப்பள்ளிக்குச் சென்றேன். வருங்கால விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து, பாராட்டி புத்தகங்களைப் பரிசளித்தேன்

    இஸ்ரோவின் அஸாதிசாட் செயற்கோள் வடிவமைக்கும் பணியில் பங்கேற்ற மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

    75 வது ஆண்டு சுதந்திர பெருவிழாவை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் பயின்ற 750 மாணவர்களின் பங்கேற்புடன் கூடிய அஸாதிசாட் செயற்கோள் முயற்சியை Space Kidz India என்ற நிறுவனம் முன்னெடுத்தது. சிறிய செயற்கைக்கோள் செலுத்தும் வாகனம் (Small Satellite Launch Vehicle) மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை காலை சரியாக 9:18 மணிக்கு  ஏவப்படுகிறது. அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில், புறப்பட்டு 12.3 நிமிட பயணத்துக்குப்பின், ராக்கெட்டில் இருந்து செயற்கைகோள் பிரிந்து, 356 கிலோமீட்டர் பூமிக்கு அருகாமை நிலையில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

    இந்த அஸாதிசாட் செயற்கோளில் 75 விதமான கருவிகள் செயல்பட உள்ளன. இதில் முக்கியமானது  EOS-02 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இதிலுள்ள, ஆப்டிகல் ரிமோட் சென்சிங் வசதிகள் மூலம் வெப்ப முரண்பாடுகள் பற்றிய வெப்ப தகவலை  பெற முடியும். விவசாயம், வனவியல், புவியியல், நீரியல், மின்சக்தி மின்னணுவியல், எதிர்வினை சக்கரங்கள் போன்ற பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுக்கான செயற்கைக்கோளாகவும் இது உள்ளது.

    அஸாதி பள்ளிகள்


    நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளின் பங்கேற்புடன் இந்த செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, நாட்டில் உள்ள 75 அரசுப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளிக்கு 10 மாணவிகள் என்ற அளவில் Space Kidz India பயிற்சி அளித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், தர்மபுரி மாவட்டம் அவ்வையார் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவாரூர் மாவட்டம் அன்னை தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகள் அஸாதி பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.  ஒவ்வொன்றிலும், தலா 10 பள்ளி மாணவிகளுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டு, வடிவமைப்பு பணியில் ஈடுபடத்தப்பட்டனர்.

    இந்நிலையில், செயற்கைகோள் வடிவமைப்பு பணியில் ஈடுபட்ட திருமங்கலம் அரசுப் பள்ளி மாணவிகளை நேரில் சந்தித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

     



    இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை புரிந்தார்கள். இதனை அறிந்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அப்பள்ளிக்குச் சென்றேன். வருங்கால விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து, பாராட்டி புத்தகங்களைப் பரிசளித்தேன்" என்று தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, ISRO

    அடுத்த செய்தி