ஹோம் /நியூஸ் /கல்வி /

விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? பெற்றோர்கள் கேள்வி

விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? பெற்றோர்கள் கேள்வி

அரசு பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்கள்

இதுவரை அறிவிப்பு வெளியிடாததால், விஜயதசமியில் மாணவர்களை சேர்க்கும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிடாததால், விஜயதசமி சேர்க்கை நடைமுறை கைவிடப்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2018-ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG, UKG, 1-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

2018-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுவந்த பள்ளிக்கல்வித்துறை, இந்த ஆண்டில் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

நாளை மறுநாள் விஜயதசமி கொண்டாடப்பட உள்ள சூழலில், இதுவரை அறிவிப்பு வெளியிடாததால், விஜயதசமியில் மாணவர்களை சேர்க்கும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.

இதையும் வாசிக்க5,043 காலியிடங்கள்: 5-ம் தேதி கடைசி நாள்! - உடனே விண்ணப்பியுங்கள்!

தனியார் பள்ளிகள் விஜயதசமியன்று போட்டிபோட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் நிலையில், அரசுப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தை, தமிழ்நாடு அரசு கைவிடுகிறதா என்றும் கல்வியாளர்கள், பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Published by:Salanraj R
First published:

Tags: School Admission, Vijayadasami