Home /News /education /

பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக சேர்க்க வேண்டும் - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக சேர்க்க வேண்டும் - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறை

5,8,10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டுதலில் , புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும். கல்வியாண்டின் இறுதியில் கணக்கெடுப்பு நடத்தாமல், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

ALSO READ | தமிழிசையாக தான் இருப்பேன், ஹிந்திசையாக மாறமாட்டேன்... முரசொலி கட்டுரைக்கு தமிழிசை பதில்
 சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, குழந்தைத் திருமணம், இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களை கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 5,8,10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Education, Tn schools

அடுத்த செய்தி