Home /News /education /

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரீசிலினை - தகவல்

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரீசிலினை - தகவல்

காட்சிப் படம்

காட்சிப் படம்

TN 11th board Exam: நீட், கேட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் 11ம் வகுப்பு பாடங்கள் அடிப்படையாக இருப்பால் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
11 ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை பரீசிலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் பல தனியார் பள்ளிகள் தமிழகத்தில் பதினோராம் வகுப்பு நடத்தாமல் 11ம்  வகுப்பிலிருந்தே 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வதாக தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் மீது உள்ளிட்ட நிறைவு தேர்வுகளுக்கு தயாராகும் புதிய சவால்கள் இருந்தது. 

தொழில்நுட்ப, பொறியியல், மருத்துவபடிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் 11ம் வகுப்பு பாடத்திட்டம் அடிப்படையாக இருப்பதுடன், பல கேள்விகள் 11ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நுழைவுத்தேர்வில் கேட்கப்படுவதால் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவின் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், பள்ளிகள் 11ம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதால் அதனை ரத்து செய்ய பரிசீலித்து வருவதாக  கூட்டத்தில்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்க: TET Exam : டெட் தேர்வு தேதி மாற்றம் : ஆசிரியர் வாரியம் முக்கிய அறிவிப்பு

ஏற்கனவே, 11ம் வகுப்பு பாடங்கள் உயர் கல்விக்கு முக்கியத்துவம் என்பதால்  பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையை ரத்து செய்ய பள்ளிக்கல்வித் துறை பரிசீலித்து வருகிறது.
Published by:Salanraj R
First published:

Tags: 11th Exam, Government school

அடுத்த செய்தி