ஹோம் /நியூஸ் /கல்வி /

அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் 1747 பேருக்கு வேலை பறிபோகும் நிலை.. காரணம் என்ன?

அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் 1747 பேருக்கு வேலை பறிபோகும் நிலை.. காரணம் என்ன?

காட்சிப் படம்

காட்சிப் படம்

1747 Govt aided Teachers likely to be sacked : இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை, பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய முடியும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

1,747 Govt aided Teachers likely to be sacked: அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வரும் 1747 பேருக்கு வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டள்ளது. மேலும் அவர்களை  பணியில் நீடிக்க தகுதியில்லை என நேற்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாமல், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 1747 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிப்பதற்கு தகுதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம்   தெரிவித்திருந்த நிலையில்  பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

இதற்கு அடுத்த கட்டமாக இவர்களை பணி நீக்கம் செய்வதற்கான ஆலோசனையில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பாடங்களை நடத்தக்கூடிய இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

தமிழகத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

அதன் பின்னர்  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி யாரும் தகுதிப் பெறாமல் பள்ளியில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், 2010ம் ஆண்டிற்கு பிறகு தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1747 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்காமல்  32  மாவட்டங்களில்  பணியாற்றி  வருகின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் அரசு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் இரட்டை இலக்கங்களில் ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் , அதிகபட்சமாக  சென்னையில் 178 பேரும் , திருச்சியில் 114 பேரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 100 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் 175 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இதையும் வாசிக்க: மகளிர் தனிச்சிறையில் வேலை வாய்ப்பு; ஆர்முள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

இது தொடர்பான வழக்கில், சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வருபவர்கள் , பணியில் நீடிப்பதற்கு எவ்வித தகுதியும் கிடையாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் அன்மையில்  தெரிவித்திருந்தது.

இதையும் வாசிக்க: காலேஜில் சேர முடியாத உங்க நண்பர்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க…’ – தமிழக அரசின் சூப்பர் திட்டத்தில் இணைந்த கலையரசன்

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில்  கேட்டபோது, இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இடைநிலை, பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய முடியும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்  பணியில் தொடர முடியாது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ,1747 பேரை  பணி நீக்கம் செய்வது குறித்த ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்

Published by:Salanraj R
First published:

Tags: Job Vacancy, Recruitment