Home /News /education /

ட்யூசன் எடுப்பவர்களுக்கு விருது கிடையாது... நல்லாசிரியர் விருதுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

ட்யூசன் எடுப்பவர்களுக்கு விருது கிடையாது... நல்லாசிரியர் விருதுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

காட்சிப் படம்

காட்சிப் படம்

செப்டம்பர் 30ம் தேதிக்கு முன் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பரிந்துரை செய்யக் கூடாது -பள்ளிக்கல்வித் துறை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    2022ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வழங்கிடுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை  வெளியிட்டுள்ளது.

    முன்னாள்  குடியரசுத் தலைவர்  ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை  (செப்டம்பர்  5) முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ்  செயல்படும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான "டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது” வழங்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில், திறன் மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்திட வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.





    ராதாகிருஷ்ணன் விருதுக்கு, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வகுப்பறையில் ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும் என்றும்; நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கக் கூடாது என்றும்,  கல்வியினை வணிக ரீதியாகக் கருதி செயல்பாடாக கூடிய, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்கள் பரிந்துரைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



     

    மேலும், மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட தேசிய விருது பெற்ற ஆசிரியர்களை பரிந்துரை செய்யக் கூடாது; செப்டம்பர் 30ம் தேதிக்கு முன் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பரிந்துரை செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: School Teacher

    அடுத்த செய்தி