Home /News /education /

182 தற்காலிக மாற்று ஆசிரியர்களை உடனடியாக பணியமர்த்த முடிவு

182 தற்காலிக மாற்று ஆசிரியர்களை உடனடியாக பணியமர்த்த முடிவு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை

தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500/, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000/-, முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000/-வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
    இல்லம் தேடிக் கல்வி போன்ற பல்வேறு இதர கல்விப் பணிகளில் ஈடுபட்டிற்கும் இடைநிலை /பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்கள் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலம் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட  இயக்குநர் வெளியிட்ட அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது;

    இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் கட்டகங்கள், மொழிபெயர்ப்பு, மின் பாடப்பொருள் தயாரிப்பு போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு ஈடுபட்டிருக்கும் 111 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 32 பட்டதாரி ஆசிரியர்கள், 39 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 182 ஆசிரியர்களின் பணிநிறைவடைய இன்னும் சிறிது காலமே இருக்கிறது.

    எனவே, இவர்களுக்கு பதிலாக பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலமாக தற்காலிக ஆசிரியர்களை பணி அமர்த்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

    தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    முதலில் 3 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர், பணியில் மூத்த ஆசிரியர். மற்றும் உதவித் தலைமையாசிரியர் (உயர் / மேல்நிலைப்பள்ளிகளில்) ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட ஒரு குழு மூலமாக தேர்வு செய்து தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. அவ்வாறு தேர்வு செய்யும் போது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும்பொழுது எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் இக்குழு தேர்வு செய்தல் வேண்டும்.

    இவ்வாறு பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500/, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000/-, முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000/-வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும்.

    182 ஆசிரியர்களுக்குப் பதிலாக அதே பாடப்பிரிவில் கற்றல் கற்பித்தல் தொய்வின்றி நடப்பதற்காக மட்டுமே தற்காலிகமாக அந்தந்த ஆசிரியர் பணிக்கான தகுதி பெற்ற நபர்களை பள்ளி மேலாண்மை குழுவின் வாயிலாக பணி அமர்த்த வேண்டும்.

    மாநில இயக்ககத்தில் பணிகளில் ஈடுபட்டிற்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்படவேண்டும்.

    இதையும் வாசிக்க'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் மிகப்பெரிய வெற்றி: கலிபோர்னியா பல்கலைக்கழகம் பாராட்டு !

    இந்த அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமல் உரிய நடவடிக்கையினை அனைத்து மாவட்ட கல்வி முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Department of School Education, Education, Illam Thedi Kalvi

    அடுத்த செய்தி