ஹோம் /நியூஸ் /கல்வி /

ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்கள் இடமாற்றம்: பள்ளிக்கல்வித் துறை அதிரடி!

ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்கள் இடமாற்றம்: பள்ளிக்கல்வித் துறை அதிரடி!

பள்ளி கல்வித் துறை

பள்ளி கல்வித் துறை

மாறுதல் கலந்தாய்வின்போது கலந்துகொள்ள வேண்டிய பணியாளர்கள் கலந்து கொள்ளாத நிலையில் அப்பணியாளர்களுக்கு நிருவாக மறுதல் அளிக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களை மாற்றுவது தொடர்பான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

  அதன்படி, 01.05.2022 அன்றைய நிலையில், மூன்று ஆண்டுகட்கு மேல் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலேயே கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கலந்தாய்வு நெறிமுறைகள்:

  மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து  பணியாளர்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் தடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு, மாறுதல் பெற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

  01.06.2022 அன்றைய நிலையில் பிற அலுவலகங்களில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அமைச்சு/பொதுப் பணியாளர்களைத் தங்கள் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடத்தி பிற அலுவலகங்களுக்கு மாறுதல் வழங்கப்பட வேண்டும்.

  3. அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பிற பணியாளர்கள் விருப்பத்தின்அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

  4. கோயம்புத்தார் மற்றும் மதுரை மண்டல கணக்கு (தணிக்கை) அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மாறுதல் கலந்தாய்வில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

  5. அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொண்டு புதிய பணியிடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.

  இதையும் வாசிக்கTNPSC, IPBS உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எழுதுபவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்கு தான்

  பட்டியலில் உள்ளபடி மாறுதல் கலந்தாய்வின்போது கலந்துகொள்ள வேண்டிய பணியாளர்கள் கலந்து கொள்ளாத நிலையில் அப்பணியாளர்களுக்கு நிர்வாக மறுதல் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Department of School Education, Education