முகப்பு /செய்தி /கல்வி / பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது? வெளியானது புதிய அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது? வெளியானது புதிய அறிவிப்பு

இலவச மடிக்கணினி

இலவச மடிக்கணினி

விலையில்லா மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களை நீக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது அஇஅதிமுக தனது  தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அப்போதைய மறைந்த முதல்வர் ஜெயலலிதா,  அம்மா மடிக்கணனி திட்டத்தை தொடங்கி வைத்ததார். ரூ. 10,200 கோடி நிதியில் 2011-16 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு 6.8 மில்லியன் (68 லட்சம்) மாணவர்களுக்கு (கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் சேர்த்து) மடிக்கணினி வழங்க திட்டமிடப்பட்டது. 2019ம் ஆண்டு வரையில்  38 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயணணடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே, கொரோனா  பெருந்தொற்று பொது முடக்கநிலை காரணமாக உலகாளவிய  உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது. இதன், காரணமாக இதன் காரணமாக தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழக அரசின் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி கடந்த 3 ஆண்டுகளாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படாமல் உள்ளன.

படங்கள் நீக்கம்:                      

இந்நிலையில், விலையில்லா மடிக்கணினிகளில், Wallpaper & Screen Lock ஆகியவற்றில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படங்களை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மடிக்கணினிகள் விநியோகிக்க முடியாத நிலையில், அவை பள்ளிக்கல்வித்துறையிலேயே தேங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில், தற்போது திமுக ஆட்சியில் இருப்பதால், மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் படத்தை அகற்றுமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் படங்களை அகற்றிய பின், விரைவில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதையும் வாசிக்க: அரசு பள்ளி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் தொடருமா?

 ஏழை,  எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துவங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு. மடிக்கணினி பணம் படைத்தவர்கள் மட்டும்தான் வாங்கி பயன்படுத்தமுடியும் என்ற நிலையில் இருந்ததை மாற்றி இன்று கிராமபுற ஏழை, எளிய மாணவர்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இலவச மடிக்கணினியின் பயன்பாடு என்ன?  இலவச மடிக்கணினியால் மாணவர்கள் மின்னணு கற்றல் திறன் அதிகரித்துள்ளதா? ஆசிரியரின் கற்பிப்பு சுமை குறைந்துள்ளதா? மடிக்கணினி கள்ளச் சந்தையில் விற்றல் அதிகரித்துள்ளதா? போன்ற கேள்விகளுக்கு பதில் தர தமிழக அரசு முன்வர வேண்டும்.  இலவச மடிக்கணினி திட்டத்தில் கல்வியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசு சார் பற்ற அமைப்புகளை ஈடுபடுத்தி மடிக்கணினி  பயன்பாடு குறித்த அறிக்கையை தமிழக அரசு தயாரிக்க வேண்டும் என்ற பொது கருத்தும் நிலவுகிறது.

First published:

Tags: Jayalalitha, Laptop