Home /News /education /

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பள்ளிக்கல்வித் துறையால்    வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் அடிப்படையில் தற்காலிக நியமனங்கள் நடைபெற வேண்டும்.

    Temporary Post Appointment:  சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை/பட்டதாரி/முதுநிலை பணியிடங்களை நிரப்புவது தொடர்பான திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, பள்ளிக்கல்வித் துறையால்    வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் அடிப்படையில் தற்காலிக நியமனங்கள் நடைபெற வேண்டும் என்றும்,  ஒரு காலியிடங்களை ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கும் போது இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்துவருபவர்கள் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    திருத்திய வழிகாட்டு நெறிமுறையின் கீழ்  :

    01.06.2022 தேதியில் தொடக்கக் கல்வி / பள்ளிக் கல்வி துறையின் கீழ் வரும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

     

    விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்சொன்னவாறு மாவட்டக் கல்வி அலுவலர் பெறும் விண்ணப்பங்களை, விண்ணப்பதாரர் தற்காலிக நியமனம் கோரும் பள்ளித் தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    கல்வித் தகுதி: 

    இடைநிலை ஆசிரியர் பதவிக்கு அரசாணை (நிலை) எண்.12, பள்ளிக் கல்வித் (தொ.க.:1(1)) துறை நாள் 30.01.2020-ன்படி வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் (ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்).

    பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு அரசாணை (நிலை) எண்:13, பள்ளிக் கல்வித் (ப.க.3(1)) துறை நாள் 30.01.2020-ன்படி 'வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் (ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்).

    முதுகலை ஆசிரியர் பதவிக்கு அரசாணை (நிலை) எண்:14, பள்ளிக் கல்வித் (ப.க.2(1)) துறை நாள் 30.01.2020-ன்படி வரையறுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள்.

    முன்னுரிமை:  ஒரு காலிப்பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் போது பின்வரும் முன்னுரிமைப்படி பரிசீலிக்க வேண்டும்.

    இடைநிலை/ பட்டதாரி பணியிடங்களுக்கான முன்னுரிமை: 

    வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்துவருபவர்கள்

    (இல்லையெனில்)

    ii) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள்.

    முதுகலை ஆசிரியர்கள்:  முதுகலை ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில்  கலந்து கொண்டவர்கள்.

    பள்ளி அமைந்துள்ள ஊராட்சி  எல்லைக்குள் வசிப்பவர்கள், (இல்லையெனில்)

    ii) பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள்  வசிப்பவர்கள் (இல்லையெனில்)

    iii) மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்)

    iv) அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள்

    இந்நியமனமானது முற்றிலும் தற்காலிகம் எனவும், மாறுதல் / முறையான நியமணங்களின் மூலம் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்படும். அன்றே தற்காலிக ஏற்பாட்டின் பேரில் பணியமர்த்தப்பட்டவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார். மேலும், அன்னாரது பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லையெனில் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Govt teachers

    அடுத்த செய்தி