ஹோம் /நியூஸ் /கல்வி /

TN HSC Results | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - அரசுப்பள்ளிகளை முந்திய தனியார் பள்ளிகள்

TN HSC Results | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - அரசுப்பள்ளிகளை முந்திய தனியார் பள்ளிகள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

வழக்கமாக விருதுநகர் கல்வி மாவட்டம் மாநிலத்தில் முதலிடத்தை பிடிக்கும். ஆனால், இம்முறை திருப்பூர் கல்வி மாவட்டம்  95.37 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது.

  மொத்தம் 8,87,772 மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வு முடிவு திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

  மதிப்பெண்கள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும்,  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

  மாநிலத்தில் மொத்தமாக 93.64 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.64 சதவிகிதம் மாணவிகளும், 88.57 சதவிகிதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  வழக்கமாக விருதுநகர் கல்வி மாவட்டம் மாநிலத்தில் முதலிடத்தை பிடிக்கும். ஆனால், இம்முறை திருப்பூர் கல்வி மாவட்டம்  95.37 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

  ஈரோடு கல்வி மாவட்டம் 95.23 சதவிகிதத்துடன் இரண்டாம் இடமும்  பெரம்பலூர் 95.15 சதவிகிதத்துடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

  தேர்ச்சி விகிதத்தில் அரசுப்பள்ளிகளை, தனியார் பள்ளிகள் முந்தியுள்ளன.

  அரசுப்பள்ளிகள் 84.76 சதவிகித தேர்ச்சியும், தனியார் பள்ளிகள் 98.26 சதவித தேர்ச்சியும் பெற்றுள்ளன.

  இதேபோல, இருபாலர் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முன்னேறியுள்ளன.

  Published by:Sankar
  First published:

  Tags: Plus 2 Examination