ஹோம் /நியூஸ் /கல்வி /

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான முக்கிய அறிவிப்பு..!

தனியார் பள்ளி

தனியார் பள்ளி

தனியார் பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை முடித்து பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அனைத்து தனியார் பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை மற்றும் திறப்பு தேதி குறித்த தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குநர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் இரண்டாம் பருவம் / அரையாண்டுத் தேர்வு முடிந்து 24.12.2022 முதல் 01.01.2023 ஆம் நாள் வரை விடுமுறையை அறிவித்துள்ளனர்.

2023 ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து துவங்கும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் நாகராஜன் முருகன் அறிவித்துள்ளார்.

Also Read : மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை நாட்கள் அறிவிப்பு : எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்புகள் படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் தொடங்கி 01.01.2023 வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 05.01.2023 ஆம் நாள் பள்ளி விடுமுறை முடித்துத் துவங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Private schools