தங்களது தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அமைச்சர்கள் அதீத ஆர்வம்...!

தங்களது தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அமைச்சர்கள் அதீத ஆர்வம்...!
  • News18
  • Last Updated: March 2, 2020, 12:13 PM IST
  • Share this:
அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் தமிழக அமைச்சர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.இதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகளவில் பரிந்துரைகள் அமைச்சர்கள் தரப்பில் வந்துள்ளன.

தமிழகம் முழுவதும் 100 அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகளாகவும், 100உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும்  தரம் உயர்த்தும் அறிவிப்பு, சட்டப்பேரவையில் வர இருப்பதால், அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், தங்களது தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

இதனால், 100 பள்ளிகளை யார், யாருக்கு பங்கிடுவது என்பது பள்ளிக்கல்வித்துறைக்கு சவாலாக உருவெடுத்துள்ளது.


தமிழக சட்டப்பேரவை, வரும் 9-ம் தேதி கூட உள்ளது. துறை வாரியாக விவாதம் நடத்தப்பட்டு, அந்தந்த துறைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும். அந்த வகையில், பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை நடக்கும் நாளன்று வெளியிடப்பட வேண்டிய புதிய அறிவிப்புகள் குறித்து, வேலைகள் நடைபெற்று  வருகின்றன.

குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும், 100 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகளாகவும் 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும், இந்த அறிவிப்பு வெளியாக உள்ளதால்  இதற்காக, தகுதி வாய்ந்த அரசு பள்ளிகளை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ். மணியன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், உடுமலை ராதா கிருஷ்ணன், பெஞ்சமின், கே.பி.அன்பழகன், வேலுமணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தங்களது தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளை தரம் உயர்த்த,  பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் 9 பள்ளிகளை தரம் உயர்த்த அமைச்சர் வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார். அரியலுார் தொகுதி உறுப்பினரும், ஆளுங்கட்சி கொறடாவுமான ராஜேந்திரன் 3 பள்ளிகளுக்கும், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் 5  பள்ளிகள் என பல அமைச்சர்கள் பள்ளிகளை தரம் உயர்த்த வலியுறுத்தி உள்ளனர்.

அமைச்சர்கள் தவிர ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களும் பரிந்துரை செய்துள்ளனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவதில் அதிக ஆர்வம் காட்டியிருப்பதால், இந்த கோரிக்கை குறித்த விவரங்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விரைவில் தெரிவிக்குமாறு பள்ளி கல்வித்துறை விவரம் கேட்டுள்ளது.

ஆளுங்கட்சி அமைச்சர்கள் ,எம்.எல்.ஏக்கள் தரப்பில் இருந்து அதிகளவு பரிந்துரை வந்துள்ளதால் பள்ளிகளை எப்படி பங்கிட்டு வழங்குவது என்பது   கல்வித்துறைக்கு சவாலாக உருவெடுத்துள்ளது.
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading