தமிழ்நாடு அரசு மருத்துக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களில் உள்ள இளநிலை செவிலியர் (பிஎஸ்சி நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி தெரிவித்துள்ளது.
இந்த படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தினையும், தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால், உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மருத்துவப் படிப்புகள்:
B.PHARM
B.P.T.
B.ASLP
B.Sc. (NURSING)
B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY
B.Sc. RADIO THERAPY TECHNOLOGY
B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY
B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY
B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY
B.Sc. CARDIAC TECHNOLOGY
B.Sc. CRITICAL CARE TECHNOLOGY
B.Sc. DIALYSIS TECHNOLOGY
B.Sc. PHYSICIAN ASSISTANT
B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY
B.Sc. RESPIRATORY THERAPY
B.OPTOM
B.O.T
B.Sc.NEURO ELECTRO PHYSIOLOGY
B.Sc.CLINICAL NUTRITION
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை செவிலியர் படிப்புக்கு 350 இடங்கள் உள்ளன. அதேபோன்று, பி.பார்ம் படிப்புக்கு 120 இடங்களும், OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY படிப்புக்கு 173 இடங்களும், B.O.T படிப்புக்கு 30 இடங்களும், MEDICAL LABORATORY TECHNOLOGY படிப்புக்கு 120 இடங்களும் உள்ளன.
மேலும், B.PHARM, B.P.T., B.O.T, B.Sc. (NURSING) ஆகிய படிப்புகளுக்கு மட்டும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: தமிழ்நாடு அரசு கல்லூரியில் செவிலியர் பட்டப்படிப்பு : பெண் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பித்தார்கள், இந்திய குடிமகனாகவும், தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள்.
வயது:
விண்ணப்பதாரர்கள் 31 டிசம்பர் 2022-அன்று 17 வயது நிறைவு செய்தவராக இருத்தல் கேண்டும். (சில நாட்களுக்குப் பிறகு பிறந்தவர்களும் பரிசீலிக்கப்படுவார்கள், அதிகபட்சம் 15 நாட்கள்)
இளநிலை செவிலியர் படிப்புக்கு: பொது பிரிவினர், பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), மிகவும் பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர்(வ) சீர்மரபினர் வகுப்பைச் சர்ந்த விண்ணப்பதாரர்கள் 2022 டிசம்பர் 31 ஆம் தேதியில் 30 வயது மிகாதவராக இருத்தல் வேண்டும். பட்டியல் இனத்தவர், பட்டியல் இன அருந்ததியர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் 2022 டிசம்பர் 31 ஆம் தேதியில் 35 வயது மிகாதவராக இருத்தல் வேண்டும்.
கல்வித் தகுதி:
தமிழக மாநில மேல்நிலை கல்வி வாரியம் அல்லது வேறு ஏதேனும் அதற்குச் சமமான வாரியத்தால் நடத்தப்படும் மேல்நிலை தகுதித் தேர்வின் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களுடன் பின்வரும் பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
a) இயற்பியல் வேதியியல், உயிரியல் மற்றும் கணித பாடம் அதனுடன் சேர்த்து வேறு பாடங்களை படித்திருக்க வேண்டும். .
b) இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்
பயிற்சி காலம்:
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை நாள்: 31-07-2022
இணையவழி மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய : 01-08-2022 முதல் 12-08-2022 வரை
தரவரிசைப் பட்டியல், தற்காலிக இடஒதுக்கீடு, கல்லூரியில் இணைதல் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
tnhealth.tn.gov.in, tnmedicalsection.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 10-ம் வகுப்பு மதிப்பெண் தாள், மேல்நிலை தேர்வு மதிப்பெண் தாள், மேல்நிலை படிப்பு முடிந்ததும் பெறப்பட்ட மாற்றுச் சான்றிதழ்கள், பிறப்பிட சான்றிதழ், நிரந்தர சாதிச் சான்றிதழ் அட்டை உள்ளிட்ட அசல் சான்றிதழ்களை விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nursing