பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்,  ஜூன் மாதம் நடைபெறும் சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான தேதி விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: April 18, 2019, 10:10 PM IST
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: April 18, 2019, 10:10 PM IST
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நாளை  வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில்  பிளஸ்-2  பொதுத்தேர்வு கடந்த மார்ச்  1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வு முடிவு திட்டமிட்டபடி நாளை ஏப்ரல் 19-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும் மதிப்பெண்கள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குருஞ்செய்தியாக வரும் என்றும் தேர்வர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்,  ஜூன் மாதம் நடைபெறும் சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி குறித்து விரைவில் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை கூறியுள்ளது.

 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...