12ம் வகுப்பு மேல்நிலை பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும்.
மதிப்பெண் மறுகூட்டல்/விடைத்தாள்கள் மறுமதிப்பீடு:
12 வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பெரும்பாலான உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
எனவே, இந்த பாடப்பிரிவுகளில் மதிப்பீடு முறையில் திருப்தி அடையாத மாணவர்கள்/ அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டல்/விடைத்தாள்கள் மறுமதிப்பீடு திட்டத்தை அரசுத் தேர்வுகள் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. மாணவர்களது விண்ணப்பங்கள் அடைப்படையில் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யும் நடைமுறையும் பின்பற்றி வருகிறது.
ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் நகலை பெற்றுக் கொண்ட மாணவர்கள், தங்களுக்கு மதிப்பெண்கள் கூடுதலாக வர வாய்ப்புள்ளது என்று நினைத்தால் மறுக்கூட்டல்/மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்தால், அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மறுமதிப்பீடு மூலம் மதிப்பெண்கள் குறையும் வாய்ப்புள்ளது என்பதையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
மறுமீதிப்பீடு செய்யாமல் விடைத்தாளின் ஜெராக்ஸ் நகளுக்கு மட்டும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சேர்க்கை பெற ஏதுவாக, மறுகூட்டல்/மறுமதிப்பீடு நடைமுறையை தேர்வுகள் இயக்கம் விரைவாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொண்டு வருகிறது.
ஆண்டுதோறும் சராசரியாக கிட்டத்தட்ட 1 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் பலன்களை அனுபவித்து வருகின்றனர்.
Published by:Salanraj R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.