ஹோம் /நியூஸ் /கல்வி /

TN HSC Results | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரங்கள்

TN HSC Results | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரங்கள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

TN HSC results out | மொத்தம் 8,87,772 மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வு முடிவு திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது.

    மொத்தம் 8,87,772 மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வு முடிவு திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

    மதிப்பெண்கள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும்,  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் மொத்தமாக 93.64 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 93.64 சதவிகிதம் மாணவிகளும், 88.57 சதவிகிதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வழக்கமாக விருதுநகர் கல்வி மாவட்டம் மாநிலத்தில் முதலிடத்தை பிடிக்கும். ஆனால், இம்முறை திருப்பூர் கல்வி மாவட்டம்  95.37 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

    ஈரோடு கல்வி மாவட்டம் 95.23 சதவிகிதத்துடன் இரண்டாம் இடமும்  பெரம்பலூர் 95.15 சதவிகிதத்துடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

    மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரங்கள் கீழே பார்க்கலாம்...

    திருப்பூர்95.37
    ஈரோடு95.23
    பெரம்பலூர்95.15
    கோவை95.01
    நாமக்கல்94.97
    கன்னியாகுமரி94.81
    விருதுநகர்94.44
    திருநெல்வேலி94.41
    தூத்துக்குடி94.23
    கரூர்94.07
    சிவகங்கை93.81
    மதுரை93.64
    திருச்சி93.56
    சென்னை92.96
    தேனி92.54
    ராமநாதபுரம்92.30
    புதுச்சேரி91.22
    தஞ்சை91.05
    உதகை90.87
    திண்டுக்கல்90.79
    சேலம்90.64
    புதுக்கோட்டை90.01
    காஞ்சிபுரம்89.90
    அரியலூர்89.68
    தருமபுரி89.62
    திருவள்ளூர்89.49
    கடலூர்88.45
    திருவண்ணாமலை88.03
    நாகை87.45
    கிருஷ்ணகிரி86.79
    திருவாரூர்86.52
    விழுப்புரம்85.85
    வேலூர்85.47
    காரைக்கால்84.47

    Published by:Sankar
    First published:

    Tags: Plus 2 Examination