12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் எஸ்.எம்.எஸ்-ல் வரவில்லையா?

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் பெறாத மாணவர்கள் அரசு வழங்கியுள்ள இணையதளத்தின் வாயிலாக முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் எஸ்.எம்.எஸ்-ல் வரவில்லையா?
மாதிரி படம்
  • Share this:
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 92.3 சதவிகித மாணவ மாணவியர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டங்களில் திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

தேர்வெழுதிய மாணவர்கள் அனைவருக்கும் தாங்கள் பள்ளியில் பதிவு செய்திருந்த மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.


ஒருவேளை எஸ்.எம்.எஸ். வர தாமதமானாலோ, வரவில்லை என்றாலோ, கீழ்காணும் இணையதளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம்.

http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in

ஊரடங்கு காரணமாக சில மாணவர்கள் இறுதி தேர்வு எழுதாமல் இருந்ததால், அவர்களுக்கு சிறப்பு தேர்வு வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்வு முடிந்த பின், அந்த பாடத்திற்கான மதிப்பெண் தனியாக வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading