Home /News /education /

நீட் விலக்கு மசோதா : மத்திய அரசு கேள்விகளுக்கு பதில்கள் தயார் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீட் விலக்கு மசோதா : மத்திய அரசு கேள்விகளுக்கு பதில்கள் தயார் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

அமைச்சர் மா.சுப்ரமணியன்

அமைச்சர் மா.சுப்ரமணியன்

நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசுக்கு ஓரிரு நாளில் தமிழக அரசின் சார்பில் பதில் அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு வேண்டாம்  என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு கொண்டுள்ளது.  முந்தைய, அதிமுக ஆட்சிக் காலத்தின் போது, ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட     நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராமல் ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதற்கிடையே, கடந்தாண்டு திமுக தலைமையிலான அரசு அதிகாரத்திற்கு வந்த பிறகு, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தொடர்பாக மசோதா  நிறைவேற்றப்பட்டடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதாவை ஆளுநர் சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை, மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை வழக்கில், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மாநில ஆளுநரின் அதிகாரம் தனிச்சையாக செயல்படக் கூடாது என்ற வாதத்தை அழுத்தம் திருத்தமாக உச்சநீதிமன்றம் முன்வைத்தது. இதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களுக்கு பின், நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசுக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். 

    இதையும் வாசிக்க:  நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொல்லி மோசமாக நடத்தியதாக அலுவலர்கள் மீது புகார்

    நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத் தொடரின் போது, நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதார  அமைச்சர் கேள்வி நேரத்தில் தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  சுகாதார அமைச்சகமும், ஆயூஷ் அமைச்சகமும் எழுப்பியுள்ள 6 கேள்விகளுக்கு பதில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

    இதன்படி, சட்டமன்றத்திற்கு நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் இல்லையென மத்திய அரசு கூறுவது தவறான வாதம் என்றார். தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசு மீறுவதாக கூறுவதை ஏற்க முடியாது எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக இருந்துவந்துள்ள புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பார் என்று நம்புவதாகவும் கூறினார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Neet, Neet Exam, Neet in english

    அடுத்த செய்தி