Home /News /education /

12ம் வகுப்புக்குப் பிறகு உயர்கல்வி தொடராத மாணவர்களை தனித்தனியாக தொடர்பு கொள்ள முடிவு: பள்ளிக்கல்வித் துறை

12ம் வகுப்புக்குப் பிறகு உயர்கல்வி தொடராத மாணவர்களை தனித்தனியாக தொடர்பு கொள்ள முடிவு: பள்ளிக்கல்வித் துறை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மாணவர்களின் EMIS எண்,கல்வி மாவட்டம், மதிப்பெண், தொலைப்பேசி எண்  உள்ளிட்ட தகவல்களை பள்ளிகளிலிருந்து பெற்று வழங்கமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
கடந்த கல்வியாண்டில் 12-ம்வகுப்பில் தேர்ச்சி பெற்று, இதுவரை உயர்கல்வி  நிறுவனத்துக்கு விண்ணப்பிக்காத 8,588 மாணவர்களை தனித்தனியே தொடர்பு கொண்டு ஊக்கப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

கடந்த மாதம் 26ம் தேதி , ஒருங்கிணைந்த பள்ளிகள் இயக்கம், மாநில திட்ட இயக்குனர் தலைமையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், நடந்து முடிந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு உயர்கல்வி தொடராத காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்றும், அதனைக் களைவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை/ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கான ஆலோசனைகளை ஒருங்கிணைந்த பள்ளிகள் இயக்கம், மாநில திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

இதையும் வாசிக்க: தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: அரசு மருத்துவமனையில் வேலை

அதில், "26.08. 2022 அன்று நடைபெற்ற கூட்டத்தின் போது பெறப்பட்ட மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த  மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கன் மற்றும் ஆலோசனைகள் மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென கூட்டத்தில் பெறப்பட்ட விவரங்களில் கூடுதலாக மாணவர்களின் EMIS எண்,கல்வி மாவட்டம், மதிப்பெண், தொலைப்பேசி எண்  உள்ளிட்ட விடுபட்ட தகவல்களை பள்ளிகளிலிருந்து பெற்று வழங்க வேண்டப்படுகிறது.

இதையும் வாசிக்க:   பி.எட் பட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

எனவே, சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பணியினை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு விவரங்கணை பெற்று உரிய படிவத்தில் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்பகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Salanraj R
First published:

Tags: Department of School Education, Education

அடுத்த செய்தி