வினாத்தாள் லீக் ஆவதை தடுக்க தமிழக அரசு புதிய முடிவு!

முன்கூட்டியே தேர்வுத் தாள் வெளியாவதைத் தடுக்கும் வகையில், இனி தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே வினாத்தாள், இணையம் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

வினாத்தாள் லீக் ஆவதை தடுக்க தமிழக அரசு புதிய முடிவு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: December 22, 2018, 9:54 PM IST
  • Share this:
பிளஸ் 2  அரையாண்டுத் தேர்வில் வேதியியல் பாட வினாத்தாள் Share Chat என்ற App-ல் முன்கூட்டியே வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முன்கூட்டியே வினாத்தாள் வெளியாவதைத் தடுக்கும் வகையில், இனி தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே இணையம் மூலம் பள்ளிகளுக்கு வினாத்தாள் அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வுகள் கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், பிளஸ்-2 வேதியியல் பாட வினாத்தாள் சமூகவலைதளங்களில் நேற்று வெளியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதற்கு முன்னர் இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட 5 பாடங்களின் வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முன்கூட்டியே வெளியான வினாத்தாளின் அடிப்படையிலேயே இன்றைய வேதியியல் பாடத்தேர்வு நடைபெற்றது.


முதற்கட்ட விசாரணையில், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்தே வினாத்தாள் கசிந்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, முன்கூட்டியே தேர்வுத் தாள் வெளியாவதைத் தடுக்கும் வகையில், இனி தேர்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே வினாத்தாள், இணையம் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

மேலும், தேர்வு நடத்தும் பள்ளிகள் அதை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் எடுத்து, மாணவர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வினாத்தாள் வெளியான விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

Also watch
First published: December 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்