முகப்பு /செய்தி /கல்வி / அறிவியல் ரீதியான சாலைப் பாதுகாப்பு: தமிழக அரசுடன் கைகோர்க்கும் சென்னை ஐஐடி

அறிவியல் ரீதியான சாலைப் பாதுகாப்பு: தமிழக அரசுடன் கைகோர்க்கும் சென்னை ஐஐடி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு ஆணையத்தை (Tamil Nadu Road Safety Authority) உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதுதான் இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்

 • Last Updated :
 • Chennai [Madras], India

சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட உள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடியில் செயல்பட்டு வரும் சாலைப் பாதுகாப்புக்கான சிறப்பு மையம் (Centre of Excellence for Road Safety CoERS) சாலை பாதுகாப்பு தொடர்பான சிந்தனை களமாக செயல்பட்டு வருகிறது. தரவுகளின் அடிப்படையில் சாலை பாதுகாப்பில்  மத்திய/ மாநில அரசுகளுக்கு அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக  தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழுவும் (Special Task Force- Road Safety), சென்னை ஐஐடி-ம்  புரிந்துணர்வு ஒப்பநத்தத்தில் அண்மையில் கையெழுத்திட்டது.

 • அடையாளம் காணப்பட்ட விபத்து நிகழும் இடங்களில் தடயவியல் விபத்துத் தணிக்கைகளை நடத்துதல், மனித, வாகனம் மற்றும் சாலைகளின் சூழலைக் கருத்தில் கொண்டு விரிவான, விஞ்ஞான ரீதியான விபத்து விசாரணையை உருவாக்குதல்;
 • பாதுகாப்புக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான விபத்து விசாரணை அறிக்கை மற்றும் ஆபத்தான இடங்களில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை புகைப்படங்களுடன் சமர்ப்பித்தல்; 
 • அனுபவ ரீதியான ஆய்வுகளை நடத்துவதற்கான வடிவமைப்பு, தரவு சேகரிப்பில் இடைவெளியைக் கண்டறிதல், தரவுச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் தெளிவான நெறிமுறைகளை வகுத்தல்;
 • அமலாக்கத்திற்கான வியூகங்களை வகுக்க ஏதுவாக தரவு சார்ந்த மேம்பாட்டு முறைகளைப் பரிந்துரைத்தல்; 
 • செயலாக்க நடைமுறைகளில் ஏற்படும் தாக்கங்களை அறிவியல்ரீதியாக மதிப்பிடுதல்;  
 • போக்குவரத்தை திறம்பட அமல்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை முழுமையாக உருவாக்குதல்;  
 • போன்ற எட்டக்கூட இலக்குகளை  இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது.

  சாலைப் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கிய பணியில் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து பணியாற்றுவதில் ஐஐடி மெட்ராஸ்-க்கு மிக்க மகிழ்ச்சி கொள்வதாக சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி தெரிவித்தார்.  

  மேலும், அவர் கூறுகையில், "தமிழ்நாடு காவல்துறையின் வலுவான தொழில்நுட்ப மற்றும் கள அனுபவங்களையும், அவர்களிடம் உள்ள பெருமளவிலான தரவுகளையும் பயன்படுத்தி, ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்புக்கான செயல்திட்டத்தை மிகக் குறுகிய காலத்திலேயே வடிவமைக்க முடியும் என்பதில் ஐயமில்லை"எனத் தெரிவித்தார்.

  இதையும் வாசிக்க:  இந்தியாவில் மருத்துவராக பதிவு செய்ய உக்ரைன் மருத்துவ மாணவர்களுக்கு ஒருமுறை வாய்ப்பு

  ஐஐடி மெட்ராஸ்-ன் ஆக்கப்பூர்வத் திட்டத்தைப் பாராட்டிப் பேசிய தமிழ்நாடு கூடுதல் காவல்துறை இயக்குநரும், சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழுவின் தலைவருமான வினித் வாங்கடே கூறும்போது," காவல்துறையினர் பல்வேறு விதமான பணிகளில் ஈடுபட வேண்டும். நகரங்களில் போக்குவரத்துக்கு என தனிப்பிரிவுகள் இருந்தாலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பெரும்பாலான நேரத்தை செலவிட வேண்டியுள்ளது.

  மாவட்டங்களில்  குறைவான எண்ணிக்கையிலேயே காவலர்கள் உள்ளதால் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களே, போக்குவரத்து செயல்பாட்டையும் கூடுதலாகக் கவனிக்க வேண்டியுள்ளது.

  இதையும் வாசிக்க:  ஒரு நாளைக்கு ரூ.20-ல் உயர்கல்வி : யுஜிசி அதிரடி

  காவலர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஒரு நாளிலோ அல்லது மாதத்திலோ போலீசார் குறிப்பிடட எண்ணிக்கையில் மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடிகிறது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர சாலைப் பணிகளை கவனிக்கும் அமைப்புகளோடு இணைந்து குறுகிய, நீண்டகாலத் தீர்வுகளைக் கண்டறிவதும், தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு ஆணையத்தை (Tamil Nadu Road Safety Authority) உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதுதான் இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்” எனத் தெரிவித்தார்.

First published:

Tags: Chennai IIT