முகப்பு /செய்தி /கல்வி / நீட் தேர்வு: ஏ.கே ராஜன் குழு அறிக்கை உணர்த்துவது என்ன?

நீட் தேர்வு: ஏ.கே ராஜன் குழு அறிக்கை உணர்த்துவது என்ன?

காட்சிப்படம்

காட்சிப்படம்

நீட் தேர்வில் முதல் முறையாக தோல்வியுற்ற மாணவர்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் தேர்வெழுதி மருத்துவ இடங்களை கைப்பற்றும் போக்கு அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

முந்தைய காலங்களில் இல்லாத வகையில், 2022 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் (Cut-off Marks) அனைத்து பிரிவினருக்கும் குறைந்திருக்கிறது. பொதுப்பிரிவில் உள்ள மாணவர்களுக்கு 117 (720ல்) மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 93 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டன. அதாவது, கேட்கப்பட்ட 200 கேள்விகளில் குறைந்தது 20 கேள்விகளுக்கு மிகச்சரியான பதில்கள் தெரிந்திருந்தால்  கூட தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.  

தமிழகத்தில்  1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், வெறும்  67, 787 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 51.20% ஆகும். கிட்டத்தட்ட 64,380 மாணவர்கள் குறைந்தபட்ச  தகுதி மதிப்பெண்களை எடுக்க வில்லை. குறிப்பாக, சென்னையில் 5 இடங்களில் நடத்தப்பட்ட அரசின் சிறப்பு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 346 பேரில், 265 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்னதாக, பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், இந்தாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண் 500-க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும்,  ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களில் வெறும் மூவர் மட்டுமே 450 முதல் 471 மதிப்பெண் பெற்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 7.5% ஒதுக்கீடு மட்டும் இல்லாவிட்டால், அரசுப் பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக்கூட இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

நடந்து முடிந்த 12ம் வகுப்புத் தேர்வில் இயற்பியல் பாடத்தில் 634 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 1500 மாணவர்களும், உயிரியல் (BIOLOGY) பாடத்தில் 1541 மாணவர்களும், தாவரவியல் பாடத்தில் 47 மாணவர்களும், விலங்கியியல் பாடத்தில் 22 மாணவர்களும் 100% (நூற்றுக்கு நூறு) மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இதில், கணிசமான மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களாக இருக்கக் கூடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே,  மாநில பாடத்திட்டங்களில் சிறந்து விளங்கும் பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வில் சோபிக்கவில்லை என்று தெரிய வருகிறது.

முன்னதாக,  நீட் தேர்வு தொடர்பான பாதிப்புக்களை விசாரிப்பதற்கு  நீதியரசர் ஏ கே ராஜன் குழுவும், இதே கருத்தை முன்வைத்தது.

2017-18க்குப் பிந்தைய மருத்துவ சேர்க்கையில், மாநில கல்வி திட்டத்தின் கீழ் படித்த மானவர்க்ளின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியது - ராஜன் குழு

NEET REPEATERS:

ஏ.கே ராஜன் குழு எழுப்பும் மற்றுமொரு முக்கிய வாதம், நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்களின் (NEET REPEATERS) வெற்றி விகிதம். நீட் தேர்வில் முதல் முறையாக தோல்வியுற்ற மாணவர்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும் தேர்வெழுதி மருத்துவ இடங்களை பெறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

உதரணமாக, 2020-21ல்  மருத்துவ இடங்களில் சேர்ந்த மாணவர்களில், 28.58% பேர் மட்டுமே நடப்பு கல்வியாண்டில் சேர்க்கை பெற்ற மாணவர்களாக  (First TImer) உள்ளனர்.  71.42% பேர், முந்தைய ஆண்டுகளில் படித்து மறுதேர்வின் மூலம் கூடுதல் மதிப்பெண்கள்  பெற்று மருத்துவ இடங்களுக்கான சேர்க்கை பெற்றவர்கள்.

ஆனால், நீட் தேர்வுக்கு முந்தைய காலங்களில், நடப்பு ஆண்டிலே தகுதி பெற்று சேர்க்கை பெறும்  எண்ணிக்கை மாணவர்களின்  சராசரி எண்ணிக்கை (2015-16 நீங்கலாக) 90% ஆக உள்ளது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு, அதிலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதாவையாயும் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஏ.கே. ராஜன் குழு அடிப்படையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது.

இருப்பினும், நீட் தேர்வு விலக்கு பெறும் வரை ஏ.கே. ராஜன் குழு அளித்த பல்வேறு தரவுகளை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்க: தமிழ்நாடு கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு

இதுகுறித்து கருத்து கூறும் கல்வியாளர்கள்," நீட் தேர்வினால், வறுமை மற்றும் சமூக நிலையில் பின்தங்கியிருக்கும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று ராஜன் குழு அறிக்கை தரகளுடன் விளக்கி இருக்கிறது. கூடுதல் காலம் செலவிட்டு பயிற்சி வகுப்புகள் மூலம் பயிலும் மாணவர்களின் வெற்றி விகிதம் அதிகரித்து கொண்டு வருவதையும் சுட்டிக் காட்ட்டியுள்ளது' என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், 7.5% இடஒதுக்கீட்டைத் தாண்டி, அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளில் நிலவும்  ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்ய முன்வர வேண்டும். ஒட்டுமொத்தகுறைவாக  பள்ளிகல்வித் துறைக்கான செலவீனங்களில் 79% ஆசிரியர் ஊதியங்களுக்கு மட்டுமே செலவாகிறது என்றும், ஆசிரியர் பயிற்சிக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு சராசரியாக 1 முதல் 5%க்கும் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், நடப்பு ஆண்டில் நீட் தேர்வில் சாதிக்காத அரசுப் பள்ளி  மாணவர்கள் மறுத்தேர்வு எழுத தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் போதிய வசதிகளை ஏறபடுத்தி தரவேண்டும் என்றும் வலியுறுத்திகின்றனர்.

First published:

Tags: Neet, Neet Exam, NEET Result