6 முதல் 12 ஆம் வகுப்பு வரை நீட் தேர்வுக்கான பயிற்சியை முறையாக அளித்தால் மாணவர்கள் தற்கொலையை தடுக்கலாம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடைய கல்வி மேம்பாட்டு கேந்திரம் (shiksha sanskriti utthan nyas) அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்வி மேம்பாட்டு கேந்திர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த கல்வி மேம்பாட்டு கேந்திர மாநில பொறுப்பாளர் கமல செல்வராஜ், "கல்விமுறையை மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கக்கூடிய வகையிலும், நாட்டின் கலாச்சாரம், பண்பாடு சார்ந்தவையாகும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களில் உண்மை தன்மையை அறிந்து அதனை பாடத்திட்டத்தில் கொண்டு வந்து மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் கூறிய அவர், "கற்றல்/கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்கமைத்து, புதிய முறைகள் பின்பற்ற வேண்டும். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு 6ம் வகுப்பிலிருந்து பயிற்சியைத் தொடங்க வேண்டும். பாடத்திட்டங்களும் அதிக்கேற்றார் போல் இருப்பது அவசியம். இப்படியாக செயல்பட்டால், நீட் தேர்வு தோல்வி காரணமாக மாணவர் தற்கொலை செய்யக்கூடிய சூழ்நிலை வராது என்றும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: TN Morning Breakfast Scheme: காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
மேலும், பேசுகையில்,"பள்ளி கல்லூரிகளுடன் சேர்ந்து மாணவர்களுக்கு கருத்தரங்கு வினாடி வினா போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் , கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் என பல்வேறு தரப்பினரும் எங்கள் இயக்கத்தோடு சேர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு கல்வி முறையை மிகச் சிறப்பான முறையில் கொண்டு வர வேண்டும் என்றும், எதிர்காலத்தில் தமிழகம் மட்டுமல்ல இந்திய தேசம் முழுவதும் எங்களுடைய சிந்தனைகள் வெளிவரும் என்றும் தெரிவித்தார்.
தாய்மொழி கல்வி குறித்து பேசிய அவர்,"எந்த கல்வியாக இருந்தாலும் அது தாய் மொழி வழி கல்வியிலேயே இருக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக இருந்து வருகிறது. அதை நாங்கள் நிச்சயம் மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்துவோம். தமிழக அரசும் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் வாசிக்க: கல்வியை இந்தியமயமாக்குவதில் உள்ள பிரச்சனைகள் என்ன?
புதிய கல்விக் கொள்கையில் நல்ல கருத்துக்கள் இருப்பதாக தெரிவித்த அவர், " அதிலுள்ள தலைசிறந்த கருத்துக்களை ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஒவ்வொரு கல்லூரியிலும் இருக்கக்கூடிய பேராசிரியர்களுக்கு அதை புரிய வைப்பதற்காக கடுமையான முயற்சியை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.இந்த புதிய கல்வி கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் நாங்கள் வேண்டுகோள் வைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசும் அதில் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
அதன் முதற்கட்டம்தான் மாணவர்களுக்கு காலை உணவு என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் ஒவ்வொரு பாடத்தையும் தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையிலே இருக்கக்கூடிய கருத்துக்களை தமிழக பாடத்திட்டங்களுக்கு கொண்டு வர வேண்டும் என்பதையும் வலியுறித்தினார்.
செய்தியாளர்- சிவக்குமார், திருமங்கலம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Neet, Neet Exam, NEET Result