ஹோம் /நியூஸ் /கல்வி /

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி : எங்கு, எப்போது? முழு விபரம் இதோ..!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி : எங்கு, எப்போது? முழு விபரம் இதோ..!

நீட் தேர்வு

நீட் தேர்வு

NEET Coaching Classes: முதல் கட்டமாக வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் வரும் 26ம் தேதியிலிருந்து நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  சென்னையில் மட்டும் 13 மையங்களில் நடைபெறும் பயிற்சியில் 1500 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

கடந்த ஆண்டு வரை ஆன்லைன் வழியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், நேரடி முறையிலான நீட் பயிற்சி வகுப்புகள் மீண்டும் இந்த ஆண்டு முதல் துவங்குகிறது. முதல் கட்டமாக வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி மாநிலம் முழுவதும் பயிற்சி வகுப்புகள் துவங்குகின்றன.

இதையும் வாசிக்க: ஊடகத் துறையில் சாதிக்க வேண்டுமா? லயோலா கல்லூரியில் கட்டணமில்லா படிப்பு

11ம் வகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்களும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 50 சதவீதம் மதிப்பெண்கள்

பெற்ற மாணவர்களை மட்டுமே நீட் பயிற்சி வகுப்பில் சேர்க்க வேண்டும் என்பது பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள விதிமுறையில் தெரிவித்துள்ளது.

Published by:Salanraj R
First published:

Tags: Neet, Neet Exam