முகப்பு /செய்தி /கல்வி / கிராம சபை கூட்டத்தில்‌ பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை

கிராம சபை கூட்டத்தில்‌ பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை

கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்களைப்‌ பகிர்ந்துகொள்வதன்‌ மூலம்‌ கிராம மக்கள்‌ தங்கள்‌ பள்ளி சார்ந்த பிரச்சனைகள்‌ மற்றும்‌ தேவைகளை அறிந்துகொண்டு தங்களின்‌ பங்களிப்பை அளிக்க இயலும்‌

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகாத்மா காந்தியடிகளின்  பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி நடைபெற இருக்கும்‌ கிராம சபை கூட்டத்தில்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழு தீர்மானங்களை தலைமையாசிரியர்‌ பகிர்ந்து கொண்டு விவாதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், அக்டோபர்‌ 2ம்‌ தேதி நடைபெறும்‌ சிறப்பு கிராம சபை கூட்டத்தில்‌ இத்தீர்மானங்களைப்‌ பகிர்ந்து கொண்டு அது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்‌.

கிராம சபை கூட்டத்தில்,  பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்களைப்‌ பகிர்ந்துகொள்வதன்‌ மூலம்‌ கிராம மக்கள்‌ தங்கள்‌ பள்ளி சார்ந்த பிரச்சனைகள்‌ மற்றும்‌ தேவைகளை அறிந்துகொண்டு தங்களின்‌ பங்களிப்பை அளிக்க இயலும்‌. மேலும்‌ கிராமப்‌ பஞ்சாயத்துக்கள்‌ பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக  செயல்பட முடியும்‌.

கிராம சபை கூட்டத்தில்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்கள்‌ தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை/முடிவுகளை இம்மாதம்‌ கடைசி வெள்ளிக்‌ கிழமை நடைபெறும்‌ பள்ளி மேலாண்மைக்குழுக்‌ கூட்டத்தில்‌ கலந்தாலோசிக்க வேண்டும்‌.

இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகிறீர்களா? இந்த தலைப்பை எல்லாம் மிஸ் பண்ணாம படிங்க

மேற்காணும்‌ அனைத்து வழிமுறைகளையும்‌ பின்பற்றி பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்ட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில்‌ பகிர்ந்து கொண்டு விவாதிக்க தலைமையாசிரியர்கள்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழு தலைவர்‌/உறுப்பினர்களை அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ , மாவட்டத்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

First published:

Tags: Department of School Education, Gandhi Jayanti, School education department