Home /News /education /

நீட் தேர்வு முடிவு: பூஜ்ஜியத்திற்கு கீழாக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்

நீட் தேர்வு முடிவு: பூஜ்ஜியத்திற்கு கீழாக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

NEET UG Examination: அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேகமாக வகுப்புகள் நடத்தப்பட்ட போதிலும் பெரிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நீட் தேர்வு: பூஜ்ஜியத்திற்கு கீழாக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்.2022-2023-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. அகில இந்திய அளவில் 17, 64,571 பேர் தேர்வை எழுதினர். இதில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1 ,32 ,167 பேர் தேர்வு எழுதியதில் 67 ,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1 ,22, 995 மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.அகில இந்திய அளவில் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

இந்தாண்டு நீட்  தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் அரசு சிறப்பு நீட் பயிற்சி வகுப்புகள் 5 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் 384 மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத பதிவு செய்தனர். இவர்களுள் 346 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இவர்களில் 81 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்குரிய தகுதி மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். 265 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களுள் 5 பேர் பூஜ்ஜியத்திற்கு கீழாக மதிப்பெண்களும்  2 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும் ஆறு பேர் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

200 மதிப்பெண்களுக்கு அதிகமாக 18 பேர் பெற்றுள்ளனர் இவர்கள்அனைவரும்  மாணவிகளே.  5 மாணவிகள்  300க்கும் அதிகமாகவும் 13 மாணவிகள்  200க்கு அதிகமாகவும்  மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள்   ஏராளாமானோர் நீட் தேர்வில் தமிழகம் முழுவதும் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் பூஜ்ஜியத்திற்கும் கீழ்  மாணவர்கள் மதிப்பெண்கள்  பெற்றிருப்பது அரசு பள்ளி மாணவர்களின் பரிதாப நிலையை காட்டுகிறது

அரசு சிறப்பு நீட் பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் நீட் தேர்வில் கடைபிடிக்கப்படுகின்ற அடிப்படை தகவல்  கூட தெரிந்திருக்கவில்லை என்பது பூஜ்ஜியத்திற்கும் கீழ் மாணவர்கள் மதிப்பெண் பெற்றிருப்பதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் வாசிக்க: நீட் தேர்வில் பின்தங்கிய தமிழ்நாடு: தேர்ச்சி விகிதம் 51.30% ஆக சரிவு

இதன் மூலம் மாணவர்களுக்கு எத்தகைய பயிற்சி அரசு பயிற்சி வகுப்பில் அளிக்கப்பட்டது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேகமாக வகுப்புகள் நடத்தப்பட்ட போதிலும் பெரிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை. தலைநகர் சென்னையில் படித்த  மாணவர்களின் நிலை பின் தங்கியுள்ள நிலையில் இதர மாவட்டங்களின் மாணவர்களின் நிலையும் மிக மோசமாகவே இந்த ஆண்டு நீட் தேர்வில் இருக்கும் என்கிற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.

இதையும் வாசிக்க: நீட் தேர்வு முடிவுகள் 2022 : மாணவிகளின் தேர்ச்சி விகிதம் என்ன?

வரும் ஆண்டுகளில் நீட் தேர்வுக்கு விலக்கு பெரும் வரையில் மாணவர்களுக்கு சிறப்பானதொரு நீட் பயிற்சியை வழங்கினால் மட்டுமே அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகும்.
Published by:Salanraj R
First published:

Tags: Neet, Neet Exam, NEET Result

அடுத்த செய்தி