Home /News /education /

கல்வி தொலைகாட்சியின் தலைமை செயலராக மணிகண்ட பூபதி நியமனம் நிறுத்தி வைப்பு - தகவல்

கல்வி தொலைகாட்சியின் தலைமை செயலராக மணிகண்ட பூபதி நியமனம் நிறுத்தி வைப்பு - தகவல்

மணிகண்ட பூபதி

மணிகண்ட பூபதி

கடந்த மே மாதம் கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை செயலக அதிகாரி என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கல்வி தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அலுவலர் பணியிடத்திற்கு நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதி நியமனம் நிறுத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை செயல் அதியாரியாக  மணிகண்ட பூபதி என்பவரை தமிழக பள்ளிக்கல்வித் துறை நியமித்தது. இதற்கு,  திமுக ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சமூக ஊடங்களில் கண்டனம் தெரிவித்து வந்தனர்.  ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்றும், பள்ளிக்கல்வித்துறையில்  தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்து வந்ததனர் . தொடர்ச்சியான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மணிகண்ட பூபதி நியமனத்தை  தற்காலிகமாக நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துளளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கல்வி தொலைக்காட்சி:

    சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்வித் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு, பாடத்திட்டம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 50 சதவிகிதமும், NEET, JEE போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 10 சதவிகிதமும் மனிதம் வளர்க்கும் நல்லொழுக்கம், மனிதநேய நிலைத்தன்மை, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு 40 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டு நிகழ்ச்சி தயாரிப்பு நடைபெறுகிறது.  கடந்த மே மாதம் கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமை செயலக அதிகாரி என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது.

    இதையும் வாசிக்க: சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளில் டாஸ்மாக்கில் ரூ.273.92 கோடிக்கு மது விற்பனை

    அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் கொண்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இந்த புதிய பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்,  தமிழ் புலமை, தொடர்பு திறன், கணினிகளை கையாளும் திறன், நடைமுறைக்கேற்ற அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன், ஊடகவியல் அல்லது பத்திரிகைத்துறையின் பட்டப்படிப்பு முடித்த 5 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் மிக்க நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது
    Published by:Salanraj R
    First published:

    Tags: Department of School Education, Minister Anbil Mahesh

    அடுத்த செய்தி