சுயநிதி தொழிற் கல்லூரிகளின் கட்டண நிர்ணய குழுத் தலைவராக நீதிபதி வெங்கட்ராமன் நியமனம்!

சுயநிதி தொழிற் கல்லூரிகளின் கட்டண நிர்ணய குழுத் தலைவராக நீதிபதி வெங்கட்ராமன் நியமனம்!
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன்
  • Share this:
தமிழ்நாட்டிலுள்ள சுயநிதி தொழிற் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய குழுத் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட்ராமனை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள பொறியியல், மருத்துவம், சட்டம், பாலிடெக்னிக் உள்ளிட்ட தொழிற்படிப்புகளைக் கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆண்டுக் கட்டணம் சுயநிதி தொழிற்கல்வி நிறுவனங்களின் கட்டண நிர்ணய குழுவால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும். 2017-18ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்விக்கான கட்டணத்தை சுயநிதி தொழிற் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய குழுத் தலைவர் தலைவர் பாலசுப்ரமணியன் அறிவித்தார்.


எனவே மூன்றாண்டுகள் முடிவடைந்து உள்ளதால் 2020-21ஆம் கல்வியாண்டிற்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. இந்த நிலையில் சுயநிதி தொழில் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய குழுத் தலைவராக இருந்த பாலசுப்ரமணியன் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி இயற்கை எய்தியதையடுத்து அந்தப் பதவியிடம்  காலியாக இருந்தது.இந்த நிலையில் உயர் கல்வித் துறைச்   வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாட்டில் செயல்படும் சுயநிதி தொழிற் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்திட  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின்  அடிப்படையில் அக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமனை நியமனம் செய்யப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..மேலும், அனைத்து இளநிலை முதுகலை பொறியியல் ,மருத்துவம் ,
பல்மருத்துவம், சட்டபடிப்பு படிப்புகளுக்கான கல்வி கட்டணம் இந்த ஆண்டே நிர்ணையம் செய்யப்பட உள்ளது.

Also see...
First published: March 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading