Home /News /education /

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி.. ரூ.5000 ரொக்கப்பரிசு - தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி.. ரூ.5000 ரொக்கப்பரிசு - தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

பேச்சுப் போட்டி

பேச்சுப் போட்டி

அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 15, 17 ஆகிய இரண்டு நாட்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே சென்னையில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில்,  "நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ண முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களது பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதற்கிணங்க, வரும் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டும், 17ம் தேதி தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டும் இந்த இரண்டு நாள்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இந்தப் போட்டியில் முதல் பரிசாக ரூ.5,000-மும்  , இரண்டாவது பரிசாக ரூ.3,000-மும், மூன்றாவது பரிசாக ரூ.2,000-மும் வழங்கப்படும். மேலும், இப்போட்டியில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு பரிசாக இரண்டு  பேருக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும்.

    பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி:

    பேச்சுப் போட்டி நாள்:   15.09.2022, 17.09.2022

    தலைப்பு











    பேரறிஞர் அண்ணா பேச்சுபோட்டிதந்தை பெரியார் பேச்சு போட்டி


    1. தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன்

    2. மாணவர்களுக்கு அண்ணா

    3.அண்ணாவின் மேடைத்தமிழ்

    4. அண்ணா வழியில் அயராது உயரும்!

    5. அண்ணாவின் வாழ்வியல்


    1.பெண்ணடிமை தீருமட்டும்

    2. தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே

    3. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்

    4. பெரியாரின் உலகு நோக்கு

    பள்ளிப்போட்டி நடைபெறும் இடம்:

    வட சென்னை - அரசு உயர்நிலைப் பள்ளி,வில்லிவாக்கம், சென்னை

    தென் சேன்னை  - அரசு மேல்நிலைப் பள்ளி, அசோக் நகர், சென்னை - 5

    மத்திய சென்னை - செய்கோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை.

    கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி:

    இடம்பெறும் நாள்: 15.09.2022, 17.09.2022

    தலைப்பு:

    தலைப்பு











    பேரறிஞர் அண்ணா பேச்சுபோட்டிதந்தை பெரியார் பேச்சு போட்டி


    1. அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும்

    2.  அண்ணாவின் மனித நேயம்

    3.அண்ணாவின் தமிழ் வளம்

    4. அண்ணாவும் தமிழ் சமுதாயமும் !

    5. அண்ணாவின் அடிச்சுவட்டில்


    1.  பெண் ஏன் அடிமையானாள்?

    2. இனிவரும் உலகம்

    3. சமுதாய விஞ்ஞானி பெரியார் 

    4. உலக சிந்தனையாளர்களும்  பெரியாரும்

    5.பெரியார் காண விரும்பிய சமூக நீதி

    6.மூட நம்பிக்கை ஒழிப்பதில் தந்தை பெரியார்

     கல்லூரிபோட்டி நடைபெறும் இடம்: 

    வட சென்னை: அம்பேத்கார் கலைக் கல்லூரி, வியாசர்பாடி, சென்னை

    தென் சென்னை: இராணிமேரி கல்லூரி, சென்னை - 5.

    மத்திய சென்னை: பாரதி மகளிர் கலைக் கல்லூரி, பிராட்வே சென்னை.

    ஆர்வமுள்ள மாணவர்கள் இதை கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Anna, Anna birthday, Periyar, Periyar Birthday

    அடுத்த செய்தி