Home /News /education /

நியாமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடிதம்

நியாமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடிதம்

நியாமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடிதம்

நியாமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்: தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடிதம்

50% மருத்துவ இடங்களில் அரசுக்கு இணையாக உள்ள நியாயமான கட்டணத்தை நிகர்நிலை கல்லூரிகள் வசூலிக்க வேண்டும் - தமிழக அரசு

    தன்னாட்சி அதிகாரம் கொண்ட மருத்துவ கல்லூரிகள், தங்களின் 50% இடங்களில் அரசுக்கு இணையாக உள்ள நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு தன்னாட்சி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

    நாடு முழுவதும் 593 மருத்துவக் கல்லூரிகளில் 92,000 மருத்துவ இடங்கள் உள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் தனியார் கல்லூரிகளில் தான் உள்ளன. அதேபோன்று,  தமிழகத்தில் உள்ள 69 கல்லூரிகளில், 19 சுயநிதி கல்லூரிகளும், 13 தன்னாட்சி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.  தமிழக அரசு கல்லூரிகளில் ரூ.13,000 மட்டுமே ஆண்டு கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவ கல்லூரிகளில், லட்சக் கணக்கில் கல்வி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

    இதில், சில மாநில அரசுகள் தனியார் சுயநிதி கல்லூரிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கல்வி கட்டணத்தை முறைப்படுத்தி வந்தன. உதாரணாமாக  தமிழ்நாட்டில் 'மாநில கட்டணக் குழு' சுயநிதி கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து வந்தன. ஆனால்,  சிம்பயாசிஸ் போன்ற தன்னாட்சி பல்கலைக்கழகங்கள் இதனை ஏற்க முன்வரவில்லை. இந்த கல்லூரி நிறுவனர்கள் தங்களின் தரத்திற்கு ஏற்ப கல்வி கட்டணங்களை  சுயமாக நிர்ணயித்து வருகின்றனர்.

    முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. தனியார் நிறுவனங்களில் (சுயநிதி மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள்) உள்ள 50% இடங்களை முறைப்படுத்துவதற்கான அதிகாரம் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம், நாட்டில் உள்ள 75% (50 -அரசு, 25% தனியார்) மருத்துவ இடங்களுக்கு நியாயமான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எஞ்சிய இடங்களுக்கான கட்டணத்தை, தனியார் கல்லூரிகளுடன் ஒப்பந்தம் செய்து, மாநில அரசுகளே நிர்ணயம் செய்துகொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டது.

    இதையும் வாசிக்க: சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை திட்டம்.. பள்ளிப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை விண்ணப்பிக்கலாம்

    இந்நிலையில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட மருத்துவ கல்லூரிகள், தங்களின் 50% இடங்களில் அரசுக்கு இணையாக உள்ள நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலாளர் தன்னாட்சி கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    2022-23 கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புகள், இன்னும் ஓரிரு மாதத்தில் தொடங்க உள்ள நிலையில், மாநில அரசின் இந்த நடவடிக்கை ஏழை மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Medical Admission, Neet

    அடுத்த செய்தி