ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் தவறாக மதிப்பெண் வழங்கிய ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!

25,000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டும் தவறு நடைபெற்றிருப்பதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் தவறாக மதிப்பெண் வழங்கிய ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!
ஆசிரியர்கள் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: May 28, 2019, 2:36 PM IST
  • Share this:
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளின் போது, தவறாக திருத்தி குறைந்த மதிப்பெண் வழங்கிய 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் ஐம்பதாயிரம் மாணவர்கள் தங்களது விடைத்தாள் பிரதிகளை கேட்டும், 4500 மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கும் விண்ணப்பித்திருந்தனர்

இதில் கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களில், சரியான மதிப்பெண் வழங்காமல், தவறாக திருத்தி, குறைந்த மதிப்பெண் வழங்கியிருப்பது மறுகூட்டலின் போது தெரியவந்துள்ளது.


குறிப்பாக, 72 மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவருக்கு 27 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் மற்றொரு மாணவருக்கு தவறான கூட்டலால் 24 மதிப்பெண் குறைக்கப்பட்டிருந்தது.

உயிரியல் விடைத்தாள்களை திருத்தும்போது அதிக தவறு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆசிரியர்கள் திருத்தியதால் இந்த தவறுகள் நடந்துள்ளன.

இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகளில் தவறிழைத்ததாக 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதுகுறித்து விளக்கமளித்த தேர்வுத்துறை அதிகாரிகள், விடைத்தாள் திருத்தும் பணிகளின் போது ஏற்படும் தவறுகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவருவதாக தெரிவித்தனர்.

எனினும், 25,000 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டும் தவறு நடைபெற்றிருப்பதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

Also see...

First published: May 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்