ஹோம் /நியூஸ் /கல்வி /

பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வு: 269 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வு: 269 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இசிஇ, செயற்கை நுண்ணறிவியல் டேட்டா சயின்ஸ் ஆகியவற்றில் மாணவர்கள் அதிகளவில் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு நடத்தப்பட்ட முதல் சுற்றுக் கலந்தாய்வில் 269 கல்லூரிகளில் ஒரு மாணவரும் இடங்களை தேர்வுச் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முதல் சுற்றுக் கலந்தாய்வில், கம்ப்யூட்டர் அறிவியல் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், இசிஇ, செயற்கை நுண்ணறிவு, டேட்டா சயின்ஸ் ஆகியவற்றில் மாணவர்கள் அதிகளவில் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . முதல் சுற்று கலந்தாய்வில் 10ஆயிரத்து 340 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர்

கடந்தாண்டு முதல் சுற்றுக் கலந்தாய்வில் 223 கல்லூரிகளில் மட்டுமே ஒரு இடங்களையும் மாணவர்கள் எடுக்காமல் இருந்தனர். ஆனால் நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை அதிகரித்து 269 கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேரவில்லை

முதல் சுற்றுக் கலந்தாய்வில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், இசிஇ, செயற்கை நுண்ணறிவியல் டேட்டா சயின்ஸ் ஆகியவற்றில் மாணவர்கள் அதிகளவில் இடங்களை தேர்வு செய்துள்ளனர். சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவினை மாணவர்கள் மிகவும் குறைவாக தேர்வுச் செய்துள்ளனர்.

இதையும் வாசிக்கசிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை: 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

எஸ்எஸ்என், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் கிண்டி வளாகம், எம்ஐடி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய 5 கல்லூரிகளில் முதல் சுற்று கலந்தாய்வில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Salanraj R
First published:

Tags: College Admission, Engineering counselling