Home /News /education /

பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் குறையலாம்: கல்வியாளர்கள்

பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் குறையலாம்: கல்வியாளர்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

12ம் வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்த போதிலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

அறிவியல் பாடப்பிரிவுகளை காட்டிலும் கலை பிரிவுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பொறியியல் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்வெழுதியவர்களில் 93.7 6 சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் சற்று அதிகமாகும்.

இதையும் வாசிக்க:  உச்ச நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் பதவி: 210 காலி இடங்கள் அறிவிப்பு  

கடந்த 2020ஆம் ஆண்டு 450 மதிப்பெண்கள் முதல் 550 மதிப்பெண்கள் வரை 50 சதவீத மாணவர்கள் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்த போதிலும் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பொறியல் கால்நடை மருத்துவ அறிவியல் ,வேளாண் படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் வாசிக்க:  +2 தேர்வு முடிவு: மாவட்டங்களின் நிலையும் அதன் பின்னுள்ள சமூக குறியீடுகளும்

இந்த ஆண்டு வேதியியல், கணிதம், இயற்பியல் பாடங்களில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத்  தொடவில்லை. அதே நேரத்தில் வணிகவியல், கணக்குப் பதிவியல் போன்ற பாடங்களில் 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அந்த வகையில் வணிகவியல் பாடத்தில் 4634 பேரும் ,கணக்கு பதிவியல் பாடத்தில் 4540  பேரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால், B.com,B.com CA போன்ற படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் கணிசமாக உயரும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது.

அதேபோன்று, அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வேதியியல்,இயற்பியல் கணிதம்,தாவரவியல் உயிரியல் படங்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த பாடங்களில் அதிக அளவு மாணவர்கள் நூறு சதவீத மதிப்பெண்கள் பெறாதாதே கட் ஆப்  குறைவதற்கு காரணமாக கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Published by:Salanraj R
First published:

Tags: Engineering counselling

அடுத்த செய்தி