Home /News /education /

தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை: பொது மக்கள் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு

தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை: பொது மக்கள் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு

காட்சிப் படம்

காட்சிப் படம்

மாநில கல்விக் கொள்கை தொடர்பான கருத்துருக்கள்‌ / ஆலோசனைகளை 15.09.2022க்குள்‌ மின்னஞ்சல்‌ அல்லது அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தின் தனித்துவமான கல்விக் கொள்கைக்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கலர்கள் அறிவுரைகளை வழங்கலாம் என்று மாநிலக் கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக்குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக்கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அறிவித்தது. டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையிலான இந்தக் குழு, புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த உயர்மட்டக் குழு தனித்துவமான மாநிலக் கொள்கையை உருவாக்கிட அனைத்து தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகளை பெற்றிட முடிவெடுத்துள்ளது.

    இதன்படி, பொதுமக்கள்‌ / கல்வியாளர்கள்‌ / தன்னார்வலர்கள்‌ / தொண்டு நிறுவனங்கள்‌/ ஆசிரியர்கள்‌ / ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்‌/ மாணவர்கள்‌ / பெற்றோர்கள்‌ / தனியார்‌ கல்வி நிறுவனத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ ஆகியோரிடமிருந்து கருத்துருக்கள்‌ மற்றும்‌ ஆலோசனைகள்‌ வழங்கலாம். மேற்படி கருத்துருக்கள்‌ / ஆலோசனைகளை 15.09.2022க்குள்‌ கீழ்க்கண்ட மின்னஞ்சல்‌ அல்லது அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கல்வி கொள்கைக் குழு உறுப்பினர் செயலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும்‌ உயர்மட்டக்குழு இணைப்பில்‌ கண்டுள்ள மாவட்டங்களில்‌ கருத்துக் கேட்புக்‌ கூட்டங்கள்‌ நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மின்னஞ்சல்‌ முகவரி: stateeducationpolicy@ gmail.com

    அலுவலக முகவரி : Centre for Excellence Building- 3வது தளம்‌, களஞ்சியம்‌ கட்டிடம்‌ பின்புறம்,
    அண்ணா பல்கலைக்கழகம்‌,
    சென்னை - 600025.

    இதையும் வாசிக்க:  நாளை நீட் தேர்வு.. எதற்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் தடை? முழு தகவல்

    முன்னதாக, தேசிய  கல்விக் கொள்கை -2020ஐ செயல்படுத்துவதற்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்க ஆன்லைன் கணக்கெடுப்பு மூலம் பல்வேறு பங்குதாரர்களின் கருத்துக்களை பெற இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Education, New Education Policy

    அடுத்த செய்தி