ஹோம் /நியூஸ் /கல்வி /

சென்னை இலக்கியத் திருவிழா 2023 : 100-க்கும் மேற்பட்ட ஆளுமைகளுடன் உரையாடும் வாய்ப்பு - நீங்களும் பங்கேற்க வேண்டுமா?

சென்னை இலக்கியத் திருவிழா 2023 : 100-க்கும் மேற்பட்ட ஆளுமைகளுடன் உரையாடும் வாய்ப்பு - நீங்களும் பங்கேற்க வேண்டுமா?

சென்னை இலக்கியத் திருவிழா

சென்னை இலக்கியத் திருவிழா

Chennai Literary Festival 2023 : சென்னை இலக்கியத் திருவிழா இந்தாண்டு 06.01.2023 முதல் 08.01.2023 வரை மூன்று நாட்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை இலக்கியத் திருவிழா இந்தாண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பயிலும் அரங்கம் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கிய அரங்கம் என நான்கு அரங்கங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திருவிழா பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடவுள்ளனர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

இந்த இலக்கியத் திருவிழாவில் தொடக்க விழா ஜனவரி 6 ஆம் நாள் காலை 10 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் மாநாட்டு அரங்கத்தில் தொடங்கும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவைத் தொடங்கி வைத்து நிகழ்வில் கலந்துகொள்வார். அதனைத் தொடர்ந்து, பவா செல்லதுரை தொடக்கவுரை மற்றும்  பால் சக்காரியா வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.

விழாவில் எஸ். ராமகிருஷ்ணன், இமையம், கரன் கார்க்கி, தமிழ்ப்பிரபா,சு. தமிழ்ச்செல்வி, இளம்பிறை, மனுஷ்யபுத்திரன், கனிமொழி கருணாநிதி MP, ஜெ. ஜெயரஞ்சன், ஏ.எஸ். பன்னீர்செல்வன், ஆர். விஜயசங்கர், வெற்றிமாறன், மிஷ்கின், யுகபாரதி, கபிலன், கதை சொல்லி சதீஷ், தெருக்குரல் அறிவு, இளங்கோ கிருஷ்ணன், விஷ்ணுபுரம் சரவணன்,  தமிழ்பிரபா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாடவுள்ளனர்.

இலக்கியம் , கதைகள், எழுத்து, இசை போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் சென்னை இலக்கியத் திருவிழாவில் பங்கேற்கலாம்.

https://docs.google.com/forms என்ற கூகுள் லிங்கில் பதிவு செய்யலாம். நீங்கள் கலந்துகொள்ள விரும்பும் உரையாடல், நிகழ்ச்சிகளைப் படிவத்தில் தேர்வு செய்து பதிவு செய்துகொள்ளலாம்.

Also Read : CBSE & ICSE தேர்வுக்கு 1,00,000-க்கு மேலான மாணவர்களுக்கு உதவும் Topper Learning Exam App - எப்படித் தெரியுமா?

மேலும் இலக்கியத் திருவிழாவில் கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை இலக்கியத் திருவிழா மற்றும் சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் தொடக்கப் பயிலரங்கம் பள்ளிக் கல்வித் துறை சார்ப்பில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் ஜனவரி 5 ஆம் நாள் நடைபெறுகின்றது.

First published:

Tags: Book Fair, Chennai, Festival