5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் - பள்ளிகல்வித்துறை

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் - பள்ளிகல்வித்துறை
பள்ளிக் கல்வித்துறை
  • News18
  • Last Updated: February 3, 2020, 2:38 PM IST
  • Share this:
5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் பொதுத்தேர்வு எழுத உள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள், அந்தந்த CRC மைய அளவில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றி கொடுத்து திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்நடைமுறையால் மாணவர்களின் கற்றல் அடைவுகளை ஒரே மாதிரியாக சோதித்தறியும், நியாயமான மதிப்பீடு செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சி அளிக்க இவை ஏதுவாக அமையும் எனவும் பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.

முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என அரசு ஆணையிட்டுள்ளதால் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாமென பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Also see...
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்