ஹோம் /நியூஸ் /கல்வி /

கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கல்வி உதவித்தொகை

கல்வி உதவித்தொகை

TN college scholarship : கல்லூரி மாணவ, மாணவியருக்கு அரசின் கல்வித்தொகை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அரசு, அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ்பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கான கல்வி உதவித்தொகைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் பி.வ/மிபிவ/சீம மாணவ/ மாணவியருக்கான அரசின் கல்வி உதவித்தொகையின் இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது.

  கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகள் படிக்கும் மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் வாங்கிய கல்வித் தொகையைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அதே போல் முதல் முறை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மூன்றாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனைகளும் இன்றி அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்குப் பெற்றோரது ஆண்டும் வருமானம் ரூ.2,50,000/- ஆக இருக்க வேண்டும்.

  Also Read : கல்வி செயல்திறன் தரவரிசைக் குறியீட்டில் 3வது நிலைக்கு சறுக்கிய தமிழகம்!

  கல்வி உதவித்தொகையைப் புதுப்பிக்க விண்ணப்பங்கள் 06.12.2022 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதே போல் புதிய விண்ணப்பங்கள் 15.12.2022 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை 20.01.2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

  https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes. htm # scholarship schemes-யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்கள் உள்ளது

  Published by:Janvi
  First published:

  Tags: College, Education, Scholarship