6 முதல் 10ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் மாணவிகளுக்கு, மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று துவங்கி வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின் உரையாற்றி அரவிந்த் கெஜ்ரிவால், " கடினமான காலங்களிலும் மாணவர்களுக்கு பயிற்றுவித்து ஊக்குவிக்கும் ஆசிரியர்களுக்கு எனது வணக்கங்கள். கடந்த மார்ச் மாதம் எனக்கு ஒரு தகவல் வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி வந்து பள்ளிகளை பார்வையிட விருப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.அதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தியா ஒரே நாடாக இருக்கலாம். ஆனால் பல கொள்கை உடைய பல கட்சிகள் உள்ளன" என்று தெரிவித்தார்.
புதுமைபெண் திட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்த அவர், " இத்திட்டம் ஏழை பெண்களின் இடைநிற்றலை நிறுத்த உதவிகரமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்று தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், 66% மாணவர்கள் அரசுப்பள்ளியில் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும். அரசு பள்ளிகளில் தரமான கல்வி, இலவசமான கல்வி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ள புதுமைப்பெண் திட்டம் நாட்டிற்கே முன்னோடி திட்டமாக இருக்கும். இந்தத் திட்டத்தை தொடக்கியதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பேசுகையில், " இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும், குழந்தை திருமணம் குறையும் பாலின சமத்துவம் ஏற்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழுக்காக 1626 நாளாக பேசா நோன்பு இருக்கும் தமிழறிஞர் டிட்டோனி முத்துச்சாமி- கோரிக்கையை நிறைவேற்ற ராமதாஸ் வலியுறுத்தல்
அனைவருக்குமான வளர்ச்சியின் உள்ளடக்கமாக புதுமை பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்குவோம் எனும் நோக்கில் உருவாக்கி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
கடந்த ஓராண்டில் பள்ளி கல்வி துறை மகத்தான சாதனைகளை செய்து உள்ளதாக தெரிவித்த அவர், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வர், எண்ணும் எழுத்தும் இயக்கம் , மாணவர் மனசு ஆலோசனை பெட்டி , உயர் தொழில் நுட்ப ஆய்வக்கங்கள் வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு , கற்போம் எழுதுவோம் திட்டம் போன்ற பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
முதற்கட்டமாக ரூ.171 கோடி செலவில் 21 மாநகராட்சி அரசு உதவி பெறும் பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தபடும் என்றும், மேலும் இந்த திட்டம் விரிவு படுத்தப்படும் என்று அறிவித்தார்.
சிற்பி சிற்பத்தை செத்துக்குவதை போன்று திராவிட மாடல் அரசு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. இதனை மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arvind Kejriwal, CM MK Stalin, Education