ஹோம் /நியூஸ் /கல்வி /

11,12 ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!

11,12 ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு..!

செய்முறைத் தேர்வு

செய்முறைத் தேர்வு

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் ஒரு பகுதியாக நடத்தப்படும் செய்முறைத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் ஒரு பகுதியாக நடத்தப்படும் அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள், மார்ச் 7ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி முதல் நடைபெறுகின்றன. இதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7 ஆம் தேதி துவங்கி, 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்வுத் துறை பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இந்த மாதம் 31ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தலா 8 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கிறார்கள். இவர்களில் செய்முறைத் தேர்வுகளை இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து 10 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: 11th Exam, 12th exam, Public exams