Tamil Nadu SSLC Result 2022: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 (June20) வெளியாகிறது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 9 லட்சம் பேர் எழுதிய 45 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது.
விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்த பின், தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நிறைவு பெற்றுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. எனவே ஜூன் 20 www.dge.tn.gov.in இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளை பின்பற்றி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்
அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.dge.tn.gov.in செல்லவும்
இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் 'TN SSLC முடிவுகள் 2022' என்ற இணைப்பைக் காணலாம் - அதை க்ளிக் செய்யவும்
அங்கு கேட்கப்பட்டுள்ள தேவையான தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் Submit-ஐ க்ளிக் செய்யவும்
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் உங்கள் திரையில் காட்டப்படும் - அதனை Download செய்து கொள்ளலாம்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.