ஹோம் /நியூஸ் /கல்வி /

பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை.... 8ம் வகுப்பு தேர்ச்சியில் ஐடிஐ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை.... 8ம் வகுப்பு தேர்ச்சியில் ஐடிஐ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ITI Department Skill Training:விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா வரைபடக்கருவிகள், இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட சலுகைகள் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tirupathur (Tiruppattur), India

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற் நிலையத்தில் 2002ஆம் ஆண்டிற்கு இரண்டு கட்டங்களாக ஏற்களவே நடைபெற்ற சேர்க்கை முடிவில் மீதமுள்ள தொழில் பிரிவுகளுக்காள் பயிற்சியாளர் நேரடி சேர்க்கை வரும் 30ம் தேதி  நடைபெற உள்ளது.

  விண்ணப்பிக்கும் முறை:

  அரசினர் தொழில் பயிற்சி நிலையம் வாணியம்பாடியில் உரிய சான்றிதழ்கள், விண்ணப்பக் கட்டனம் மற்றும் சேர்க்கைக் கட்டணம் ரூ.235/- ஆகியவற்றுடன் நேரடியாக வந்து பயிற்சியில் சேர்ந்துக்கொள்ளலாம்.

  கல்வித்தகுதி (10ம் வகுப்பு தேர்ச்சி)

  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண் இருபாலரும்.

  நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் (Fashion Design and Technology) ஆகிய தொழிற் பிரிவில் சேர்ந்துக்கொள்ளலாம்.

  கல்வித்தகுதி (10ம்  வகுப்பு அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சி)

  10ம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண் இருபாலரும்

  தோல் பொருள் உற்பத்தியாளர் (Leather Goods Maker) தொழிற் பிரிவில் சேர்ந்துக்கொள்ளலாம்.

  வயது வரம்பு:

  பெண்கள்: வயது உச்ச வரம்பு இல்லை

  ஆண்கள்: 14 முதல் 40 வயது வரை

  அரசின் சலுகைகள் :

  பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை, மாதம் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி,விலையில்லா பாட புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா வரைபடக்கருவிகள், இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட சலுகைகள் பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்கஈசியா கிடைக்கும் அரசு வேலை.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் எளிமையா பாஸ் இப்படி ஒரு வழி இருக்கு!

  Published by:Salanraj R
  First published:

  Tags: ITI, ITI Students