தேசிய கல்விக்கொள்கை திட்டத்தை திரும்பப் பெற சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும் - திருமாவளவன்

விசிக தலைவர் - திருமாவளவன்

தேசிய கல்விக் கொள்கை திட்டத்தை திரும்பப் பெற சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் இயற்ற வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என்றும் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த முடிவை திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று அறிக்கை விடுத்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Also read: ஊடகவியலாளர்களை மிரட்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டி.ஜி.பி.யிடம் மனு

இது தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், தேசிய கல்விக் கொள்கை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து உடனடியாக தமிழக அரசு அதனை நிராகரிக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Published by:Rizwan
First published: