Home /News /education /

BYJU’S Young Genius சீசன் 2 இன் இந்த புதிய எபிசோடில் இந்தியாவின் இரு வேறு பகுதிகளிலிருந்து வரும் இரண்டு இளம் சாதனையாளர்களைப் பற்றி காண்போம்

BYJU’S Young Genius சீசன் 2 இன் இந்த புதிய எபிசோடில் இந்தியாவின் இரு வேறு பகுதிகளிலிருந்து வரும் இரண்டு இளம் சாதனையாளர்களைப் பற்றி காண்போம்

BYJU’S Young Genius Season 2

BYJU’S Young Genius Season 2

BYJU’S Young Genius Season 2 | ஒரு இளம் மல்யுத்த வீராங்கனை தனது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக தன் வாழக்கையில் எதிர்கொள்ளும் அனைத்து தடைகளையும் எதிர்த்துப் போராடுகிறார், மேலும் இன்னொரு இளம் மேதை நான்கு கலைக் கண்காட்சிகளை நடத்தி தனது பண்பியல் கலை ஓவியங்களை விற்றுள்ளார், அப்போது அவருக்கு வெறும் இரண்டு வயதுதான்!

மேலும் படிக்கவும் ...
இன்றைய உலகில் ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு இரண்டு உறுதியான வழிகள் உள்ளன. ஒன்று புத்திசாலிதனத்தின் மூலம் தனது திறமையை உலகறியச் செய்வது.  மற்றொன்று துணிச்சலான கடின உழைப்பின் மூலம் தனது இலக்கை எட்டுவது.

#BYJUSYoungGenius2 இன் இந்த எபிசோடில் இந்த இரண்டு தத்துவங்களின் அடிப்படையிலான நிகழ்வுகள்தான் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன, இங்கே ஒரு இளம் மல்யுத்த வீராங்கனை தனது நாட்டிற்கு பெருமை சேர்ப்பதற்காக தன் வாழக்கையில் எதிர்கொள்ளும் அனைத்து தடைகளையும் எதிர்த்துப் போராடுகிறார், மேலும் இன்னொரு இளம் மேதை நான்கு கலைக் கண்காட்சிகளை நடத்தி தனது பண்பியல் கலை ஓவியங்களை விற்றுள்ளார், அப்போது அவருக்கு வெறும் இரண்டு  வயதுதான்!

அவர்களின் வியக்க வைக்கும் திறமைகளைப் பற்றி அறிந்துகொள்ள தொடர்ந்து வாசிப்போம், நாமும் உத்வேகம் பெறுவோம்.

பளு தூக்குதலுடன் நமது எதிர்ப்பார்ப்புகளையும் அதிகரிக்கும் சஞ்சலா குமாரி

இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமுறைகளைப் பற்றி ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும், அவர்கள் வெறுமனே ஏனோதானோவென்று எதையும் செய்வதற்குப் பதிலாக தங்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமல்லாமல் தங்கள் ஒட்டமொத்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறார்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் அடியெடுத்து வைத்திருக்கும் இளம் சாதனையாளர்களில் ஒருவரான 15 வயது சஞ்சலா குமாரி இந்த வளர்ந்து வரும் போக்குக்கு ஒரு சிறந்த உதாரணம்.

சஞ்சலா ஜார்கண்டில் உள்ள ஹட்வால் என்ற சிறிய பகுதியைச் சேர்ந்தவர், ஸ்போர்ட்ஸ் அகாடமி அவருக்கு இலவச தங்குமிடம், உணவு, பள்ளிப்படிப்பு மற்றும் பயிற்சி ஆகியவற்றை வழங்குவதற்கு உறுதியளித்ததால், அவரது  பெற்றோர் விளையாட்டை ஒரு தொழிலாக ஏற்றுக்கொள்ள அவருக்கு ஊக்குவித்தனர்.அனைத்து விளையாட்டுகளுக்கு மத்தியில், சஞ்சலா மல்யுத்தத்தை ஆர்வத்துடன் தேர்வுசெய்தார், மேலும் அடுத்தடுத்த உயர்ந்த நிலைகளில் போட்டியிடத் தேவையான வலிமையும் திறன்களும் அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது. சஞ்சலா ஏற்கனவே மல்யுத்தத்தில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் உட்பட பல  பதக்கங்களை வென்றுள்ளார் மற்றும் கடந்த ஆண்டு புடாபெஸ்டில் நடந்த வேர்ல்டு கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் 17 வயதுக்குட்பட்ட 40 கிலோ பிரிவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

சஞ்சலா பேசியபோது, ​​போகத் சகோதரிகளிடமிருந்து நிறைய உத்வேகத்தைப் பெற்றதாக வெளிப்படுத்தினார், அந்த சகோதரிகளைப் பற்றிய கதை 'தங்கல்' திரைப்படத்தில் படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சஞ்சலாவை ஆச்சரியப்படுத்தும் விதமாக, கீதா போகத் சிறப்பு விருந்தினராக இந்த எப்பிசோடில் இணைந்துள்ளார், மேலும் இருவரும் சில மல்யுத்த சொற்களைப் பற்றி உரையாடினார்கள், அதைத் தொகுப்பாளர் ஆனந்த் நரசிம்மன் அவர்களுடன் இணைந்த ரசித்துக் கொண்டிருந்தார். போகத்தை சஞ்சலா சிரமமின்றி தூக்குவது இந்த எப்பிசோடில் மிகவும் அற்புதமான தருணமாகும்.

சஞ்சலா தற்போது 15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான போட்டிகளுக்குப் பயிற்சி பெற்று வருகிறார், மேலும் 2024 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே அவரது குறிக்கோளாகும். அவரது தீவிரமான உறுதியுடன், அவர் விரைவில் அந்த இலக்கை எட்டுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.அத்வைத் உடன் உலகிற்கு வண்ணம் பூசுவோம் 

ஒரு ஏழு வயது சிறுவன் பண்பியல் கலையைப் பற்றிப் "நான் ஒரு கேலக்ஸியாக பார்ப்பதை நீங்கள் கடலாகப் பார்க்கலாம்" என்று சொல்லக்கூடும் என்பதை நாம் எதிர்ப்பார்த்திருக்க மாட்டோம், ஆனால் அதைதான் அத்வைத் கோலர்கர் கூறியிருக்கிறார்.

அத்வைத் தனது ஒரு வயதில் ஓவியம் வரையத் தொடங்கி, இரண்டாவது வயதில் தனது முதல் கண்காட்சியை நடத்தினார். அவரது பெற்றோர் கொடுத்த ஊக்கத்துடன், அத்வைத் பண்பியல் கலை ஓவியத்தை வரையத் தொடங்கினார், மேலும் அமெரிக்கா, கனடா, லண்டன் மற்றும் துருக்கியில் ஏற்கனவே தனது ஓவியங்களை விற்றுள்ளார்.

2018 ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற கலர் ப்ளிஸார்ட் என்று அழைக்கப்படும் கண்காட்சியில் நான்கு நாட்களில் அவரது 32 ஓவியங்கள் விற்றுத் தீர்ந்தன. பின்னர் அதே ஆண்டில் நியூயார்க்கின் ஆர்டெக்ஸ்போவில் அவர் தனது படைப்புகளைக் காட்சிப்படுத்திய இளைய கலைஞராக அறியப்பட்டார்.

எந்த வகையிலும் விளக்க முடியும் என்பதால் அத்வைத் பண்பியில் ஓவியத்தை மிகவும் விரும்புகிறார்.  அவர் இப்போது டைனோசர்கள், விண்வெளி, நீருக்கடியில் உலகத்தை கற்பனை செய்தல் மற்றும் பலவற்றிலிருந்து உத்வேகத்தை ஈர்க்கும் தனது ஒவ்வொரு ஓவியத்திற்கும் தீம்களை ஒதுக்குகிறார். மேலும், தனக்குப் பிடித்த நிறம் கறுப்பு என்றும், ஏனெனில் அது வலிமையையும் தைரியத்தையும் குறிக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

எபிசோடில், அவர் தனது ஓவியங்களில் சிலவற்றை பத்மஸ்ரீ பரேஷ் மைட்டிக்குக் காட்சிப்படுத்துகிறார், அவர் அத்வைத்தின் திறமை மற்றும் இந்த சின்னஞ்சிறிய வயதில் கைவினைப் பற்றிய அவரின் புரிதலைக் கண்டு வியந்து அவரை மேலும் ஊக்கப்படுத்தினார்.

அத்வைத் தனது வயதிற்குட்பட்ட பிள்ளைகளைப் போலவே தானும் ஓவியம் வரைவதைத் தொடர விரும்பினாலும், அவர் ஒரு பழங்காலவியல் நிபுணராக இருக்க விரும்புவதாகவும், புதிய வகை டைனோசர்களைக் கண்டறிய விரும்புவதாகவும், மேலும் ஒரு எழுத்தாளராகவும் விரும்புவதாகவும் கூறுகிறார். கலை உலகில் தனது ஆரம்பகால தொடக்கத்தைக் கருத்தில் கொண்டு, அத்வைத் இவை அனைத்திலுமே சாதிக்கக்கூடும்!

இன்றைய இளம் தலைமுறையினரின் இத்தகைய கனவுகள் மற்றும் ஆர்வங்களைத்தான் BYJU’S Young Genius சீசன் 2 மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளது. துணிச்சலான சஞ்சலா மற்றும் திறமையான அத்வைத் போன்றோரைப் பார்ப்பதும் அவர்களின் கதைகளைக் கேட்பதும், நமக்கு மேலும் மேலும் உத்வேகத்தை அளிக்கிறது மற்றும் அவர்களைப் போலவே நம்மையும் சாதிக்கத் தூண்டுகிறது.

இப்போதே இந்த முழு எபிசோடையும் காணுங்கள்!
Published by:Selvi M
First published:

Tags: BYJU'S Young Genius

அடுத்த செய்தி