முகப்பு /செய்தி /கல்வி / இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது - பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு

இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது - பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

பள்ளி வேலை நேரம் தொடங்குவதற்கு முன்பும், பள்ளி வேலை நேரம் முடிந்த பின்பும் தனிச்சிறப்பு வகுப்புகள் மூலம் பயிற்சி அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொது தேர்வெழுத  உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியைக் கருத்தில் கொண்டு பள்ளி நாட்களில் காலையும், மாலையும் தனி சிறப்பு வகுப்புகள் நடத்தவும், சனிக்கிழமை வார விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முதல் 10 இடங்களின் பட்டியலில்  கொண்டு வருவதற்கும் 'சிகரம் தொடு 2022-23' திட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டத்தில் பங்குபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

இதையும் வாசிக்க: அதிகரிக்கும் கல்வி ஏற்றத்தாழ்வுகள்! நீதியரசர் முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகள் என்ன?

இதனடிப்படையில், பள்ளி வேலை நேரம் தொடங்குவதற்கு முன்பும், பள்ளி வேலை நேரம் முடிந்த பின்பும் தனிச்சிறப்பு வகுப்புகள் மூலம் பயிற்சி அளிக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், சனிக்கிழமை  வார விடுமுறை நாளன்று சிறப்பு தனி வகுப்புகள் பள்ளிகளில் நடைபெறும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடினமான பாடங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த இந்த சிறப்பு வகுப்புகள் பயன்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

top videos
    First published:

    Tags: 10th Exam, 12th exam, Thiruvallur