முனைவர் பட்டம் பெற்றார் திருமாவளவன்!

மதமாற்றம் ஒரு பார்வை (மீனாட்சிபுரம் மதமாற்றம் ) என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார்.

முனைவர் பட்டம் பெற்றார் திருமாவளவன்!
ஆளுநர் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பட்டம் வழங்குகிறார்
  • News18
  • Last Updated: August 22, 2019, 3:50 PM IST
  • Share this:
மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் விசிகவின் தலைவர் திருமாவளவன்.

நெல்லை மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தில் உள்ள வஉசி அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் பட்டம் பெறுபவர்களை வாழ்த்திப் பேசினார்.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தினார். இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் 48,400 மாணவ மாணவிகள் பட்டம் பெறுகின்றனர் .


இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம்  தொகுதியின் எம்பியுமான திருமாவளவன் உள்ளிட்ட 753 பேருக்கு விழா மேடையில் பட்டம் வழங்கப்பட்டது .

இதில் 650 பேர் முனைவர் பட்டம் பெறுகின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் மதமாற்றம் ஒரு பார்வை (மீனாட்சிபுரம் மதமாற்றம் ) என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தார். அவருக்கும் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள கிராம மக்கள் மதம் மாறியதை பற்றி இந்த ஆய்வு இருந்தது.Also see...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்