Home /News /education /

இந்த இளம் மேதைகள் தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை போர்டு என்ற அம்சத்தின் உடன் பல்வேறு வழிகளில் தகர்த்தெறிகிறார்கள். உத்வேகம் அளிக்கும் அவர்களின் கதையைப் பற்றி பார்ப்போம்!

இந்த இளம் மேதைகள் தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளை போர்டு என்ற அம்சத்தின் உடன் பல்வேறு வழிகளில் தகர்த்தெறிகிறார்கள். உத்வேகம் அளிக்கும் அவர்களின் கதையைப் பற்றி பார்ப்போம்!

BYJUS Young Genius

BYJUS Young Genius

BYJUS Young Genius Season 2 | Amazon தளத்தில் கொரோனா யுகாவை விற்ற பிறகு 11 வயதான வீருக்கு தொழில்முனைவோர் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் அவர் ஆப்ஸ், போர்டுகள், கார்டுகள் மற்றும் டைஸ் ஆகியவற்றிற்கான தனது சொந்த நிறுவனமான ABCD ஐ உருவாக்கியுள்ளார், மேலும் அவர் ஏற்கனவே வேறு சில கேம்களையும் உருவாக்கியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
இந்தியாவில் உள்ள மாணவர்களின் சாதனைகள் பொதுவாக இரண்டு விஷயங்களைச் சார்ந்துள்ளன, ஒன்று விளையாட்டில் சிறந்து விளங்குவது, மற்றொன்று படிப்பில் சிறந்து விளங்குவது. BYJUS Young Genius Season 2 இன் இன்றைய எப்பிசோட், இந்த இரண்டு விஷயங்களிலும் தங்களுடைய தனித்துவமான வழியில் சிறந்து விளங்கும் இரண்டு இளம் சாதனையாளர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, மேலும் இந்தச் சாதனைகள் தங்களின் சக வயதில் உள்ளோர் மற்றும் வருங்கால இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து அவர்களை வழிநடத்த உதவுகின்றன. இந்த எப்பிசோடில் இடம்பெற்ற மேதைகளான வீர் மற்றும் தனிஷ்கா பற்றி இங்கே நாம் தெரிந்துகொள்வோம்.

தன் சலிப்பிலிருந்து தப்பிக்க வீருக்கு உதவிய போர்டு கேம்கள்:

கோவிட் -19 பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தின் மூலம் விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது, பலரைப் போலவே கொச்சியைச் சேர்ந்த 11 வயதான வீர் காஷ்யப்பும்  வீட்டில் அமர்ந்திருந்தார். இருப்பினும், மற்றவர்களைப் போல் வெறுமனே பொழுதைக் கழிக்காமல், தனித்துவமான ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இந்த ஊரடங்கு நேரத்தை வீர் பயன்படுத்திக்கொண்டார், அதாவது அவர் தனது சொந்த போர்டு கேமான 'கொரோனா யுகா' என்பதை உருவாக்கினார், இது மற்ற போர்டு கேம்களைப் போலவே திரும்பத் திரும்ப விளையாடத் தூண்டினாலும், வைரஸ் பரவுவதைத் தடுக்கத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளைப் பற்றி பயனர்களுக்கு அறிவுறுத்தும் கூடுதல் நன்மையைக் கொண்டுள்ளது.

அவரது கண்டுபிடிப்பு, புதுமைத் துறையில் சிறந்து விளங்கியதற்காக 2021 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி ராஷ்திரிய பால் புரஸ்கார் விருதையும், இந்திய சாதனையாளர் மன்றத்தின் இளம் சாதனையாளர் விருது 2021 ஐயும் அவருக்குப் பெற்றுத் தந்தது. 

Amazon தளத்தில் கொரோனா யுகாவை விற்ற பிறகு வீருக்கு தொழில்முனைவோர் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் அவர் ஆப்ஸ், போர்டுகள், கார்டுகள் மற்றும் டைஸ் ஆகியவற்றிற்கான தனது சொந்த நிறுவனமான ABCD ஐ உருவாக்கியுள்ளார், மேலும் அவர் ஏற்கனவே வேறு சில கேம்களையும் உருவாக்கியுள்ளார். 1971 போரின் 50வது ஆண்டு நிறைவை அடிப்படையாகக் கொண்ட டோர் டி கோ; 16.12.1971 எனும் கேமும் நௌகாபரா எனப்படும் இரண்டாம் உலகப் போரின் யுக்திகளை அடிப்படையாகக் கொண்ட நேவல் கேமும் அதில் அடங்கும்.எப்பிசோடில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆனந்த் நரசிம்மன் மற்றும் விருந்தினர் மௌனி ராய் இருவரும் வீர் உடன் கொரோனா யுகாவை விளையாடி மகிழ்ந்தனர். 11 வயதில் ஏற்கனவே தான் உருவாக்கிய ஆறு கேம்களுடன், வீர் தன் சாமர்த்தியத்தின் மூலம் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறார்.

13 வயதில் போர்டு எக்ஸாம்களை முறியடித்தவர்:

பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து யோசிக்காத வயதில், இந்தூரைச் சேர்ந்த 14 வயது தனிஷ்கா சுஜித் தன் விருப்பத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார். நாட்டில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் இளம் தலைமை நீதிபதியாக பதவியேற்க வேண்டும் என்று தனிஷ்கா விரும்புகிறார்.

தனிஷ்காவுக்கு இளம் வயதிலேயே சாதிக்கும் திறமை இயற்கையாகவே அமைந்திருக்கிறது. அவர் தனது 12 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வில் 65% தேர்ச்சி பெற்று, 13 வயதில் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அதே வயதில் உளவியல் துறை இளங்கலை பட்டப்படிப்பிற்காகக் கல்லூரியில் சேர்ந்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்!

அதனுடன், மத்தியப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுக்குத் தகுதி பெற்ற இளையவர் என்பதற்காக 2020 ஆம் ஆண்டில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் தனிஷ்காவின் பெயர் இடம்பெற்றது. இதே தகுதிக்காக ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அவருக்கு ‘கிராண்ட் மாஸ்டர்’ பட்டத்தையும் வழங்கியது.

எப்பிசோடில் அவரின் அதீத மகிழ்ச்சியும் ஆற்றலும் நம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது, மேலும் அவரின் கதை போர்டு தேர்வுகளுக்கோ பெரிய தேர்வுகளுக்கோ படிப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தாது என்பதை அனைவருக்கும் உணர வைக்கும். மாறாக, நாம் புத்தகங்களை நேசித்தால், அவை நம்மை நேசிப்பதோடு மட்டுமல்லாமல் தனிஷ்காவிற்கு வழங்கிய வாய்ப்புகளைப் போலவே நமக்கும் வாய்ப்புகளை வழங்கும்.

போர்டு கேம்களில் இருந்து, போர்டு எக்ஸாம்களை முறியடித்தது வரை, #BYJUSYoungGenius இன் இந்த எப்பிசோட் இரண்டு வழிகளில் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. வீர் மற்றும் தனிஷ்கா இடம்பெறும் முழு எப்பிசோடையும் இப்போதே கண்டு மகிழுங்கள்.
Published by:Selvi M
First published:

Tags: BYJU'S Young Genius, Education

அடுத்த செய்தி