• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை - தமிழக தொடக்கக்கல்வி இயக்ககம் எச்சரிக்கை

விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை - தமிழக தொடக்கக்கல்வி இயக்ககம் எச்சரிக்கை

  • News18
  • Last Updated :
  • Share this:
    அரையாண்டு மற்றும் 2-ம் பருவ விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என தமிழக தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

    தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மற்றும் நர்சரி பிரைமரிப் பள்ளிகளுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு மற்றும் 2-ம் பருவ விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ஆனால், சில பள்ளிகளில் இந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடப்பதாக புகார் வந்துள்ளதாக தொடக்கக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அப்பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: