ஹோம் /நியூஸ் /கல்வி /

1 முதல் 9 ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் 50 சதவீதமாக குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு!

1 முதல் 9 ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் 50 சதவீதமாக குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படாது இருக்கும் வகையில் இந்த ஒரு முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

1 முதல் 9ம் வகுப்பு வரை ஏற்கனவே பாடத்திட்டங்கள் 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 50 சதவீதமாக குறைப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத ஒரு நிலை உள்ளது ஏற்கனவே 1 முதல் 9-ம் வகுப்பு வரை 40 சதவீதம் அளவிற்கு பாடத்திட்டமும் 10,11,12 ம் வகுப்புகளுக்கு சில பாட பகுதிகள் மட்டும் குறைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது பள்ளிகள் திறப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளதால் 40 சதவீதத்திலிருந்து பாடத்திட்டங்களை 50 சதவீதமாக குறைப்பதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Also read... மருத்துவ இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக வழக்கு - நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கவில்லை என புகார்

இது குறித்த ஒரு அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வரும் திங்களன்று தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது அதன் பிறகு முதல்வரின் ஒப்புதலோடு இந்த பாடதிட்டங்கள் குறைப்பு குறித்த அரசாணை வெளியாக இருக்கின்றது.

மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படாது இருக்கும் வகையில் இந்த ஒரு முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: DPI